TET : என்.சி.டி.இ., உத்தரவில் மாற்றம்: கல்வித்துறை செயலர் மீது வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2014

TET : என்.சி.டி.இ., உத்தரவில் மாற்றம்: கல்வித்துறை செயலர் மீது வழக்கு


ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின் உத்தரவை செயல்படுத்தவில்லை' என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதாவிற்கு எதிராக தாக்கலான அவமதிப்பு வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ராஜபாளையம் இன்பக்குமார் தாக்கல் செய்த மனு:

தேசிய ஆசிரியர் கல்விக்குழு (என்.சி.டி.இ.,) அறிவிப்பின்படி 2010 ஆக.,23 க்கு பின் பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி பி.ஏ., மற்றும் பி.எஸ்சி., முடித்து பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் தகுதித்தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டது. அதில் 2011 ஜூலை 29 ல் பள்ளிக்கல்வித்துறை சில மாற்றங்களை செய்தது. 'அந்த அறிவிப்பிற்கு பின் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

வரையறுக்கப்பட்ட 32 பாடங்களில் பட்டப்படிப்பு முடித்து பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தகுதித் தேர்வு எழுத முடியும்' என தெரிவிக்கப்பட்டது. எனவே, 'தேசிய ஆசிரியர் கல்விக்குழு பிறப்பித்த உத்தரவை மட்டுமே செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு அதில் மாற்றம் செய்யக்கூடாது' என உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். 'தகுதி அடிப்படையில் மனுவை பரிசீலித்து மூன்று மாதங்களுக்குள் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் உத்தரவு பிறப்பிக்க ஜூலை 24 ல் ஐகோர்ட் உத்தரவிட்டது; ஆனால் நடவடிக்கை இல்லை. முதன்மைச் செயலர் சபீதா மீது கோர்ட் அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி டி.ராஜா விசாரித்தார். மனுதாரர் வக்கீல் ஆர்.கிருஷ்ணசாமி, அரசு வக்கீல் குணசீலன்முத்தையா ஆஜராகினர். அரசுத்தரப்பில் ஜன.,5 ல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

9 comments:

  1. Dear Admin

    Please publish the GO for which 32 subjects in Degree + B.Ed only will be eligibility to attend the TET exam. Because we don't find any such a clause in PROSPECTUS of TET 2013 .

    ReplyDelete
  2. Dear admin pls publish the clear one

    ReplyDelete
  3. எங்க சுப்ரீம் கோர்ட் வழககு என்னதான் ஆச்சு அட்மின் சார்
    கொஞ்சம் சொல்லுங்க சார்
    ஏன்னா நிறைய வேலை இருக்கு. மாடு மேயக்க போகனும்.
    TET EXam ல 106 மதிப்பென் எடுத்தால் மாடுதான் மேயக்கனும் பின்ன கலெக்ட்ரா ஆகமுடியும்.

    ReplyDelete
  4. Can anybody tell about our supreme court case (Go71) details?

    ReplyDelete
  5. NO SECOND LIST COME THIS YEAR. ALL VACANCIES WILL FILL ONLY JUNE15. TET WILL BE ANNOUNCED IN JAN 15, EXAM ON 22.03.15. SO START STUDY.

    ReplyDelete
  6. NO SECOND LIST COME THIS YEAR. ALL VACANCIES WILL FILL ONLY JUNE15. TET WILL BE ANNOUNCED IN JAN 15, EXAM ON 22.03.15. SO START STUDY.

    ReplyDelete
  7. NO SECOND LIST COME THIS YEAR. ALL VACANCIES WILL FILL ONLY JUNE15. TET WILL BE ANNOUNCED IN JAN 15, EXAM ON 22.03.15. SO START STUDY.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி