காந்திகிராம கிராமிய பல்கலை: 100 ஆண்டுகள் கிழியாத சான்றிதழ் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 14, 2015

காந்திகிராம கிராமிய பல்கலை: 100 ஆண்டுகள் கிழியாத சான்றிதழ் அறிமுகம்

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழாவின்போது, 100 ஆண்டுகளுக்கு கிழியாத பட்டச் சான்றிதழ்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, துணைவேந்தர் சு. நடராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து, அவர் மேலும் தெரிவித்ததுகாந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழா, ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தர் ரெனைனா ஜப்வாலா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 1,044 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இப்பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் பட்டங்களில் முதன்முறையாக 10 சிறப்பு அம்சங்களான எழுத்துகள் நீரில் அழியாத தன்மை, கிழிக்க முடியாத தன்மை, ஆலமரத்துடன் கூடிய பல்கலை. மணி மைதானம் பின்புலம், பல்கலை. சின்னத்துடன் கூடிய பாலிமர் ஷீட்டில் பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இதனை 100 ஆண்டுகள் வரை கிழியாமல் பாதுகாக்க முடியும்.
அதேபோல், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் பட்டியலும் 16 சிறப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளன என்றார் அவர்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி