பிளஸ்–2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 5–ந்தேதி தொடங்குகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2015

பிளஸ்–2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 5–ந்தேதி தொடங்குகிறது


தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–2 வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு தேர்வு மார்ச் 5–ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

முன்னதாக பிளஸ்–2 செய்முறை தேர்வு (பிராக்டிக்கல்) தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

இது அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவுபடி நடைபெற உள்ளது. பிப்ரவரி 5–ந்தேதி முதல் பிப்ரவரி கடைசிக்குள் தேர்வை நடத்தி முடித்து, மாணவ–மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை தரும்படி அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் பிப்ரவரி 5–ந்தேதி முதல் பிப்ரவரி 12–ந்தேதி வரையிலும் 50 சதவீத மாணவர்களும், பிப்ரவரி 13–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை 50 சதவீத மாணவர்களும் செய்முறை தேர்வு செய்ய உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி