20% கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை: ஆய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2015

20% கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை: ஆய்வு


தமிழகத்தில், கிராமப்புற பகுதிகளில் செயல்படும் 20 சதவீத பள்ளிகளில்,மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதி இல்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009ன் கீழ், ஒவ்வொரு பள்ளிகளுக்கும் மாணவர் ஆசிரியர் விகிதம், வகுப்பறை ஆசிரியர் விகிதம், பள்ளி மைதானம், சுற்றுச்சுவர், பொது கழிவறை, பெண்களுக்கான கழிவறை, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர், நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கட்டாயம் இருப்பது அவசியம்.

பள்ளிகளில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்பின் கீழ் அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்க திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.ஏசர் அமைப்பு சார்பில், கிராப்புற பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து, 2014ம் ஆண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 9.9 சதவீத பள்ளிகளில், குடிநீர் தொட்டி அமைக்கப்படவில்லை. 10.3 சதவீத பள்ளிகளில் குடிநீர் தொட்டி வசதிகள் இருந்தும் குடிநீர் வசதி இல்லை.மேலும், 2.5 சதவீத பள்ளிகளில் பொதுக்கழிவறை வசதிகள் இல்லாமலும், 17.7சதவீத பள்ளிகளில் கழிவறை இருந்தும் பயன்படுத்த இயலாத சூழலிலும் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி, 20 சதவீத பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.பெண்களுக்கான தனிப்பட்ட கழிவறை இல்லை; கழிவறை இருந்தும் பூட்டிகிடப்பது மற்றும் இருந்தும் பயன்படுத்த இயலாத சூழலில் இருப்பது என்ற பிரிவுகளின் கீழ் 31.3 சதவீத பள்ளிகள் உள்ளன. கிராமப்புற பகுதிகளில், மாணவிகளுக்கானஅடிப்படை வசதிகள் இல்லாமையே இடைநிற்றலுக்கு முக்கிய காரணம்.மேலும், 34 சதவீத கிராமப்புற பள்ளிகளில் மைதான வசதியும், 29 சதவீத பள்ளிகளில் சுற்றுச்சுவர், 13.5 சதவீத பள்ளிகளில் நூலகம் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி