ஜன.28-இல் பட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2015

ஜன.28-இல் பட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் ஜன. 28-ஆம் தேதி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலச் செயலர் தி.கோவிந்தன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதாகஅதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ஆனால்,அரசு அந்தத் திட்டத்தை ரத்து செய்யவில்லை.

தற்போது தரம் உயர்த்தப்பட்ட 50 மேல்நிலைப் பள்ளிகளுக்கு உடனடியாக கலந்தாய்வு மூலம் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாதம் 28-ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.சேலம் நாட்டாண்மைக் கழக கட்டடம் எதிரே நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் இ.ஆர்.பிரபாகரன் தலைமை வகிக்கிறார். இதில் ஆர்ப்பாட்டத்தில்ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி