பிளஸ் 2 இலவச பாடப்புத்தகங்கள் வருகை: பாதுகாப்பாக வைக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2015

பிளஸ் 2 இலவச பாடப்புத்தகங்கள் வருகை: பாதுகாப்பாக வைக்க உத்தரவு


வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, இலவச பாடப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு வந்துள்ளன. அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வைக்க, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூனில் பள்ளி திறக்கப்பட்டதும், சில பள்ளிகளில் பிளஸ் 2 பாடப்புத்தகங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் அவதிப்பட்டதாக புகார் எழுந்தது.

இப்பிரச்னையை தவிர்க்க வரும் கல்வியாண்டில் (2015 - 16) பள்ளி வாரியாக தேவைப்படும் பாடப்புத்தகங்கள் எண்ணிக்கை குறித்து அறிக்கை அனுப்புமாறு முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு சில மாதங்களுக்கு முன் உத்தரவிடப்பட்டது. அதற்கேற்றவாறு தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தில் இருந்து மாவட்ட தலைநகரங்களுக்கு தமிழ், ஆங்கிலவழி புத்தகங்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வைத்து கல்வி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 1 பாடப்புத்தங்களும் விரைவில் வரவுள்ளன. மேல்நிலை மாணவர்களுக்கு காலதாமதம் இன்றி புத்தகம் கிடைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி