முதல்வர் அறிவித்து 3 ஆண்டுகள் ஆகியும் முடிவடையாத உதவி பேராசிரியர் நியமனம் அரைகுறையாக நிற்கும் தேர்வு பட்டியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2015

முதல்வர் அறிவித்து 3 ஆண்டுகள் ஆகியும் முடிவடையாத உதவி பேராசிரியர் நியமனம் அரைகுறையாக நிற்கும் தேர்வு பட்டியல்


மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய தமிழக முதல்வர் அறிவித்த அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனம் இன்னும் முடிவடையவில்லை. பணிக்கான தேர்வு பட்டியல் அரைகுறையாக நிற்கிறது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படு வார்கள் என்று 2011-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான அரசாணை 13.9.2011 அன்று வெளியானது.

இதைத் தொடர்ந்து, 1,093 உதவி பேராசிரியர்களை தேர்வுசெய்வதற்கான அறிவிப்பை கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28.5.2013 அன்று வெளியிட்டது.உயர்கல்வித் தகுதி (பிஎச்.டி.), பணி அனுபவம், நேர்காணல் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது.உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் பட்டது.உயர்கல்வித் தகுதி, பணி அனுபவத்துக்கான மதிப்பெண்படி “ஒரு காலியிடத்துக்கு5 பேர்” என்ற விகிதாச்சார அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு ஏறத் தாழ 6 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்ற டிசம்பர் மாதம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.இதையடுத்து, ஆங்கிலம், கணிதம், இயற்பியல், தாவர வியல், விலங்கியல் உட்பட குறிப்பிட்ட சில பாடங்களுக்கு மட்டும் தேர்வு பட்டியல் வெளி யிடப்பட்டது.பொருளாதாரம், புவியியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங் களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி மதிப்பெண் விவரம் டிசம்பர் 24-ம் தேதி வெளியிடப்பட்டது. இன்னும் தேர்வு பட்டியல் வெளியாகவில்லை. எனவே, தேர்வு பட்டியலே அரைகுறையாகநிற்கிறது.முதல்வர் அறிவித்து 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் உதவி பேராசிரியர் நியமனம்முடிவடையாததால் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தற்போதைய நியமனம் 2012-13-ம் ஆண்டுக்கான காலியிடங்களுக்கு உரியதாகும். இதற்கிடையே,2013-14, 2014-15 கல்வி ஆண்டுகளுக்கான காலியிடங்கள் வந்துவிட்டன.2012-13-ம் ஆண்டுக்கான நியமனமே இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்த ஆண்டுக்கான காலியிடங்கள் எப்போது நிரப்பப்படுமோ? என்று பிஎச்.டி. பட்டதாரிகளும், ‘ஸ்லெட்’, ‘நெட்’ தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதுகலை மற்றும் எம்.ஃபில். பட்டதாரிகளும் கவலைப்படுகிறார்கள்.

பள்ளி ஆசிரியர் நியமனம் போன்று கல்லூரி உதவி பேராசிரியர்களையும் முன்பு போல போட்டித் தேர்வு மூலமாக தேர்வுசெய்ய வேண்டும் என்பது அவர்களின் தலையாக கோரிக்கை.தற்போதைய நியமனம் 2012-13-ம் ஆண்டுக்கான காலியிடங்களுக்கு உரியதாகும். இந்த ஆண்டுக்கான நியமனமே இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான காலியிடங்கள் எப்போது நிரப்பப்படுமோ?

5 comments:

  1. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்

    ReplyDelete
  2. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  3. அனுப்புநர்: - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற SC & SCA மற்றும் பிரமலை கள்ளர்
    இடைநிலை ஆசிரியர்கள்
    தமிழ்நாடு

    பெறுநர் :- உயர்திரு கல்வி செய்தி வலைதள நண்பர்கள்
    மற்றும் ஆதிதிராவிட நலத்துறை பள்ளி பணி நியமனத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் சகோதர சகோதரிகள் , நண்பர்கள்
    மற்றும்
    பிரமலை கள்ளர் பள்ளிக்கு தேர்வு பெற்ற சகோதரர்கள் நண்பர்கள்
    மற்றும் சமுக சிந்தனை அதிகம் உள்ள நல்ல உள்ளங்கள்

    பொருள் :- அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்ட திற்கு ஆதரவு தர வேண்டி , கலந்து கொள்ள வேண்டி

    இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை
    நாள் : 29.01.2015 ( வியாழக்கிழமை )
    நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 , மணிவரை

    மதிப்பிற்குரிய நண்பர்களே வணக்கம்

    நாம் 17/08/2013 அன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் இடைநிலை . ஆசிரியருக்கான தாள் 1 ல் தேர்ச்சி பெற்றுள்ளோம்
    தமிழகத்தில் சுமார் 1096 ஆதிதிராவிட நல பள்ளிகள் உள்ளன அதில் சுமார் 1 1 / 2 இலட்சம் மாணவ , மாணவிகள் பயின்று வருகின்றனர்

    இந்நிலையில் 21.08.2014 அன்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு எண் 06/2014 - ல் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தாள் 1 ல் தேர்ச்சி பெற்ற SC and SCA ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என்றும்

    பிரமலை கள்ளர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள 64 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் பிரமிலை கள்ளர் சமூகத்தினருக்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியானது ஆனால் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இது நாள் வரை ADW & PIRAMILAI KALLAR பள்ளிகளில் காலியாக உள்ள 669+ 64 பணியிடம் நிரப்பப்படாமலே் இருக்கிறது

    மேலும் இக்காலதாமதத்திற்கு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் நிலுவையில் உள்ள சகோதரர் ராமர் வழக்கு ( வழக்கு எண் WP (MD ) 16547 மற்றும் சகோதரர் சுடலை மணி ( வழக்கு எண் WP (MD) 17255 ஆகிய இரு சகோதரர்கள் தொடுத்த வழக்குகளே காரணம் என தெரிகிறது

    இதுகுறித்து கடந்த 13/10/14 மற்றும்14/11/14 மற்றும் 9.01.15 மற்றும் 22/01./14 ஆகிய நாள்களில் சென்னை சென்று துறை சார்ந்த இயக்குநர்கள் , அரசு தலைமை செயலாளர், முதல்வர் தனிப்பிரிவு ஆதிதிராவிட நலத்துறை , மிகவும் பிற்படுத்தப்பட்போர் நலத்துறை, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகிய இடங்களில் மனு அளித்துள்ளோம்

    மேலும் அந்த இரு சகோதர்கள் தொடுத்த வழக்கிலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்று ஒரு வாதியாக நாமும் இணைந்துள்ளோம் .
    இருந்தும் இன்னும் முடிவு எட்டப் படாமலே் இருக்கிறது இதனால் நமது எதிர்காலம் , நலத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது
    அரசின் ஆதரவு நமக்கு இருந்தாலும் அரசு தலைமை வழக்கறிஞர் மதுரையில் ஒருநாள் ஆஜர் ஆனால் மட்டுமே நமது வழக்கு முடியும் என்பதாலும் அரசின் கவனத்தை நம் பக்கம் ஈர்க்க ( 29.01.15 ) வியாழக்கிழமை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை (சென்னை ) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து தமிழக காவல்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டோம் எனவே நாம் விரைவில் ஆசிரியர் பணிக்கு செல்ல அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

    நன்றி

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி