5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2015

5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை


தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் தொடர்பாக, கடந்த 2013 - 14ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தகவல்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் 1,442 பள்ளிகளில் மாணவியருக்கான கழிப்பறை வசதியும், 4,278 பள்ளிகளில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதியும் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித் தகவல்முறையின் கீழ் இந்த தகவல் கிடைத்ததும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில், நடப்பு ஆண்டில் 6,000த்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகள், தலா 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து. அனைவருக்கும்கல்வி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல், பயன்படுத்தப்படாத, 300 கழிப்பறைகளிலும், சிறிய அளவிலான பழுதுபார்ப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி