927 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் காலி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2015

927 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் காலி


தமிழக பள்ளிகளில், காலியாக உள்ள, ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.அரசு பள்ளியில், கல்வி பயிலும் மாணவர்களின், கலை மற்றும் கற்பனை திறனை ஊக்கப்படுத்த, ஓவியம், இசை, தையல்,எம்ப்ராய்டரி, கலைநுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகள், தமிழக பள்ளிகளில் துவக்கப்பட்டன.
6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஓவிய வகுப்பு நடக்கிறது.தமிழகத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில், பகுதி நேர சிறப்புஆசிரியர்கள் என்ற பெயரில், ஓவிய ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளிகளில் உள்ள, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு ஓவிய ஆசிரியர் நல சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில்,'ஆசிரியர்கள் பற்றாக்குறை, குறைவாக ஒதுக்கப்படும் பாடவேளைகளால், தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக, அரசு பள்ளி மாணவர்களை உருவாக்குவது சிரமமாகிறது. வாரத்தில் இரண்டு பாடப்பிரிவு மட்டுமே தரப்படுகிறது. மாநிலம் முழுவதும், 927 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தாமதமின்றி, ஓவியஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இசை பாடப்பிரிவை துவக்கி, இசை கருவிகளும் வழங்க வேண்டும்', என்றார்.

3 comments:

  1. akilan sir poruthadhu podhum...madurai high court case nilai patri padhividungal...anaivarum kathirupil ullom...pls sir

    ReplyDelete
  2. Please give details about the case

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி