மதிப்பெண்களை தேடாதீர்கள்; அறிவை தேடுங்கள்: மாணவர்களுக்கு 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2015

மதிப்பெண்களை தேடாதீர்கள்; அறிவை தேடுங்கள்: மாணவர்களுக்கு 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் அறிவுரை


''மாணவர்கள் மதிப்பெண்களை தேடுவதைக் காட்டிலும், அறிவைத் தேடுவதே பயனுள்ளதாக இருக்கும்,'' என 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறினார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் மாதவன் நாயர், கோவையில் நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 'இஸ்ரோ' தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் அரசியல் தலையீடுகள் இருந்ததாக கூறப்பட்டதே? நான் தலைவராக இருக்கும்வரை அந்தகைய செயல்பாடுகள் எதுவும் நடக்கவில்லை. அதற்குபிறகு, தலைவர் தேர்ந்தெடுப்பதில் என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு தெரியாது. ஜி.பி.எஸ்., உதவியுடன், பூமியில் இருக்கக்கூடிய இடங்கள், பொருட்களை மிக அருகில் சென்று பார்ப்பது போல் பார்க்க முடிகிறது.

இது ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்குமா ? இது ஆரோக்கியமான வளர்ச்சிதான். ஜி.பி.எஸ்., சிஸ்டத்தை பொறுத்தவரை, இந்தியா இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. அதிக செயல்திறன் கொண்ட இன்னும் ஒரு செயற்கைக்கோள் ஏவப்பட வுள்ளது. அது ஏவப்பட்டதும், இந்தியா தனக்கே உரிய ஜி.பி.எஸ்., சிஸ்டத்தை பயன்படுத்தும். தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்புகளில் ஆர்வம் குறைந்து வருகிறதே ? பொதுவாக மாணவர்களுக்கு எந்த துறையில் அதிக ஆர்வம் உள்ளது என்பதை பெற்றோர் ஆராய வேண்டும். ஆர்வம் உள்ள துறையில் மாணவர்கள் படித்து அந்த துறைக்கே உரிய அறிவை பெற வேண்டும். இன்றைய சூழலில் மாணவர்கள் மதிப்பெண்னை தான் தேடுகிறார்கள். அறிவைத்தேடும் படிப்பு இருக்கும் பட்சத்தில், இந்தியாவின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பு மிகப்பெரிய சக்தியாக இருக்கும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி