பிற வாரிய பள்ளி மாணவர்களுக்கான தமிழ் புத்தகங்கள் மார்ச் மாதம் விநியோகம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2015

பிற வாரிய பள்ளி மாணவர்களுக்கான தமிழ் புத்தகங்கள் மார்ச் மாதம் விநியோகம்?


சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பிற வாரிய பள்ளி மாணவர்களுக்கான தமிழ் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், மார்ச் மாதம், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறைஇயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.
மாநில பாடத்திட்டத்தின் கீழ், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில், கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டம் அமலில் இருந்து வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு வரை, தமிழ் பாடம் கட்டாயமாக உள்ளது. அடுத்த கல்வி ஆண்டில், அனைத்து பள்ளி மாணவர்களும்,தமிழ் பாடத்தில், பொது தேர்வு எழுதவுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2006 கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தில், தமிழக அரசு பாட திட்டத்தை சேராத இதர பள்ளிகளும், அடுத்த ஆண்டு முதல், தமிழ் பாடத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும். அடுத்த கல்வி ஆண்டில் (2015 - 16), முதல் வகுப்பில், தமிழ் பாடம் கற்பிக்க வேண்டும். பின், படிப்படியாக, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, தமிழ் பாடம் நீட்டிக்கப்படும்.2024 - 25ம் ஆண்டில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் பாடம் இடம்பெறும். அனைத்து மாவட்டங்களிலும், பிற பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள், மாணவர்களின் விபரம், ஆசிரியர்களின் விபரம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன.

கோவை மாவட்டத்தில், பிற பாடத்திட்டங்களை பின்பற்றும், 91 பள்ளிகளின் விபரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், "மாவட்ட வாரியாக பிற பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைகுறித்த, எண்ணிக்கை பெறப்பட்டுள்ளது.முப்பருவ முறையின் கீழ், மாணவர்களுக்கு மூன்று பிரிவாக வழங்கப்பட்டுள்ள பாடபுத்தகங்கள் ஒருங்கிணைத்து ஒரே தொகுப்பாக அச்சிடப்பட்டுள்ளது. தமிழ் பாட புத்தகம் அச்சிடும் பணி, முடியும் தருவாயில் உள்ளது. மார்ச் மாதம் புத்தகங்கள் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி