பொங்கல் போனஸ் கிடைக்காமல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் கொந்தளிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2015

பொங்கல் போனஸ் கிடைக்காமல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் கொந்தளிப்பு


தமிழகத்தில் பொங்கல்
பண்டிகை நடக்கும் நிலையிலும்
போனஸ் கிடைக்காமல் அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் கொதிப்பில்
உள்ளனர்.அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்
வழங்க மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டார்.

இதையடுத்து ஆண்டுதோறும்
பொங்கல் போனஸாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தலா ரூ.3000, உயர்
அதிகாரிகளுக்கு தலா ரூ.1000
வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு பொங்கல் போனஸ்
அறிவிப்பை முதல்வர் பன்னீர்செல்வம் ஜன.,8 ல் வெளியிட்டார்.
கடந்தாண்டு பொங்கல் போனஸ் ஜன.,12ல் வழங்கப்பட்டது. இந்தாண்டு பொங்கல்
முடிந்த நிலையிலும் போனஸ்
கிடைக்காமல் அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் கொதிப்பில் உள்ளனர்.
தொடர் விடுமுறை காரணமாக
அடுத்த வாரம்தான் கிடைக்க
வாய்ப்புள்ளது. எனினும்
கருவூலத்துறை ஊழியர்கள்,
அதிகாரிகளுக்கு மட்டும் பொங்கல்
போனஸ் கிடைத்துள்ளது

2 comments:

  1. ஆங்கிலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உள்ளது
    SC CANDIDATE ABOVE 90 ONLY pls mail to kathir202020@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி