முதியோர் உதவித்தொகை பெற ஆதார் அட்டை: தகுதியுள்ள பயனாளிகளைகண்டுபிடிக்க முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2015

முதியோர் உதவித்தொகை பெற ஆதார் அட்டை: தகுதியுள்ள பயனாளிகளைகண்டுபிடிக்க முடிவு


முதியோர் உதவித் தொகை பெற ஆதார் அடையாள பதிவு எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தகுதியுள்ள பயனாளிகளை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.முதியோர் உதவித்தொகை அ.தி.மு.க, ஆட்சி அமைந்தவுடன் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
அன்றிலிருந்து உதவிதொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது. சரியான பயனாளிகளை தேர்வு செய்யாததால் இன்றுவரை குழப்பம் நீடிக்கிறது. எண்ணிக்கையை குறைக்க அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தகுதியுள்ள பயனாளிகள் பலர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் உதவித் தொகை பெற ஆதார் அடையாள அட்டை பதிவு எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த எண் உள்ள பயனாளிகளின் விபரங்களை அவர்கள் கணக்கு உள்ள வங்கி மற்றும் தபால் அலுவலகம் மூலம் வருவாய்த் துறையினர் பதிவு செய்து வருகின்றனர். இதற்கான பணிகள் ஜன.27 முதல் பிப். 20 வரை நடைபெறுகிறது.

ஆதார் அட்டை உள்ளவர்கள் அதன் நகலுடன், அட்டை கிடைக்காதவர்கள் ஒப்புகை சீட்டுடன் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலக மையத்திற்கு சென்று பதியவேண்டும். ஆதார் அட்டை பதிவு செய்யாதவர்கள் தாலுகா அலுவலக சிறப்பு மையத்திற்கு ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு அசல் ஆவணங்களுடன் செல்லவேண்டும். அங்கு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மனுவை பூர்த்தி செய்து, ஆதார் அட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதார் எண் மூலம் வரும்காலத்தில் தனிநபர் ஒருவரின் வருமானம், சொத்து, தொழில் பதிவு செய்யும்போது முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை குறையும். உண்மையான பயனாளிகளை பயன்பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி