ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பக்கோரி உண்ணாவிரதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2015

ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பக்கோரி உண்ணாவிரதம்.

அனுப்புநர்: - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற SC& SCA மற்றும் பிரமலை கள்ளர்இடைநிலை ஆசிரியர்கள்.தமிழ்நாடு

பெறுநர் :- உயர்திரு கல்வி செய்தி வலைதள நண்பர்கள் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை பள்ளி பணி நியமனத்தை எதிர்நோக்கிகாத்திருக்கும் சகோதர சகோதரிகள் , நண்பர்கள் மற்றும் பிரமலை கள்ளர் பள்ளிக்கு தேர்வு பெற்ற சகோதரர்கள் நண்பர்கள்மற்றும் சமுக சிந்தனை அதிகம் உள்ள நல்ல உள்ளங்கள்

பொருள் :- அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்ட திற்கு ஆதரவு தர வேண்டி , கலந்து கொள்ள வேண்டி

இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிக

நாள் : 29.01.2015 ( வியாழக்கிழமை )

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 , மணிவரைமதிப்பிற்குரிய நண்பர்களே வணக்கம்,நாம் 17/08/2013 அன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் இடைநிலை . ஆசிரியருக்கான தாள் 1 ல் தேர்ச்சி பெற்றுள்ளோம்.

தமிழகத்தில் சுமார் 1096 ஆதிதிராவிட நல பள்ளிகள் உள்ளன அதில் சுமார் 1 1 / 2 இலட்சம் மாணவ , மாணவிகள் பயின்று வருகின்றனர்இந்நிலையில் 21.08.2014 அன்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு எண் 06/2014 - ல்ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தாள் 1 ல் தேர்ச்சி பெற்ற SC and SCA ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என்றும் பிரமலை கள்ளர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள 64 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் பிரமிலை கள்ளர் சமூகத்தினருக்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியானது ஆனால் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இது நாள் வரை ADW& PIRAMILAI KALLAR பள்ளிகளில் காலியாக உள்ள 669+ 64 பணியிடம் நிரப்பப்படாமலே் இருக்கிறது.

மேலும் இக்காலதாமதத்திற்கு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் நிலுவையில் உள்ள சகோதரர் ராமர் வழக்கு ( வழக்கு எண் WP (MD ) 16547 மற்றும் சகோதரர் சுடலை மணி ( வழக்கு எண் WP (MD) 17255 ஆகிய இரு சகோதரர்கள் தொடுத்த வழக்குகளே காரணம் என தெரிகிறது.இதுகுறித்து கடந்த 13/10/14 மற்றும்14/11/14 மற்றும் 9.01.15 மற்றும் 22/01./14 ஆகிய நாள்களில் சென்னை சென்று துறை சார்ந்த இயக்குநர்கள் , அரசு தலைமை செயலாளர், முதல்வர் தனிப்பிரிவு ஆதிதிராவிட நலத்துறை , மிகவும் பிற்படுத்தப்பட்போர் நலத்துறை, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகிய இடங்களில் மனு அளித்துள்ளோம்.மேலும் அந்த இரு சகோதர்கள் தொடுத்த வழக்கிலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்று ஒரு வாதியாக நாமும் இணைந்துள்ளோம் .

இருந்தும் இன்னும் முடிவு எட்டப் படாமலே இருக்கிறது இதனால் நமது எதிர்காலம் , நலத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.அரசின் ஆதரவு நமக்கு இருந்தாலும் அரசு தலைமை வழக்கறிஞர் மதுரையில் ஒருநாள் ஆஜர் ஆனால் மட்டுமே நமது வழக்கு முடியும் என்பதாலும் அரசின் கவனத்தை நம் பக்கம் ஈர்க்க ( 29.01.15 ) வியாழக்கிழமை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை (சென்னை ) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து தமிழக காவல்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டோம் எனவே நாம் விரைவில் ஆசிரியர் பணிக்கு செல்ல அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
ஆதிதிராவிடர் நலத்துறை அகிலன் :8608224299

கள்ளர் நலத்துறை ஜெகன் :9442880680

27 comments:

  1. Thank you admin.... ellorum kalanthukunga friends. Elloraium kalanthukka vayungal

    ReplyDelete
    Replies
    1. Sir iam from Coimbatore. Have you remember me.already we meet on14/11/2014.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete

    3. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்

      Delete
    4. ஆதிதிராவிட நலத்துறை , பிரமிலை கள்ளர் பள்ளிகள் நியமனம் தாமதத்திற்கான காரணம் மற்றும் விரைந்து பணி நியமனம் முடிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள்
      இதுவரை என்ன நடந்தது இனி என்ன நடக்கும் ஒரு பார்வை

      வழக்கின் தற்போதய நிலை

      சகோதரர் திரு ராமர் , சகோதரர் திரு சுடலை மணி இருவர் தொடர்ந்த வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது இட ஒதுக்கீடு மற்றும் மாநில அரசின் கொள்கை முடிவு , தமிழக அரசின் தாழ்த்தப்பட்டோருக்கான முன்னுரிமை சம்பந்தமான வழக்கு என்பதால் அரசு தலைமை வழக்கறிவர் நீதிமான் ஐயா சோமையா ஜி அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜர் ஆனால் தான் வழக்கு முடிவுக்கு வரும்

      இது சம்பந்தமாக 4 முறை சென்னை சென்று தமிழக அரசிடம் முறையிட்டதற்கு அவர்கள் கூறிய பதில்கள்

      பள்ளிக்கல்வி துறை செயலர் கூறியவை

      வழக்கு விரைந்து முடிக்க அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டது நீதிமன்றத்தை அரசு நிர்பந்திக்க முடியாது வழக்கு வரும்போது முடிந்துவிடும்

      முதலமைச்சர் தனிப்பிரிவில் கூறியவை

      வழக்கு விரைந்து முடிக்க அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டது நீதிமன்றத்தை அரசு நிர்பந்திக்க முடியாது வழக்கு வரும்போது முடிந்துவிடும் அவர்கள் இருவர் வழக்கு தொடரும் போது நீங்கல் 669 பேர் அந்த வழக்கில் இணைந்து வழக்கு விரைந்து முடிக்க முயற்சி பண்ணுங்களேன்

      ஆசிரியர் தேர்வு வாரியம்

      வழக்கு விரைந்து முடிக்க அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டது நீதிமன்றத்தை அரசு நிர்பந்திக்க முடியாது வழக்கு வரும்போது முடிந்துவிடும்

      ஆதிதிராவிட நலத்துறை

      மதுரை யில்யில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை கிளை யில் உள்ளவர்கள் வழக்கின் நிலையை கவனித்து கொண்டு வருகின்றனர் வழக்கை விரைந்து முடித்து பணி நியமனம் செய்து விடுவோம் இந்த வழக்கால் நலத்துறை பல பிரச்சனையை சந்திக்கிறது உங்களை விட நாங்கள் இவ்வழக்கை முடிக்க அனைத்து வேலைகளும் செய்துவிட்டோம்
      அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக சொல்லி அரசாணை எல்லாம் போட்டு விட்டோம் வழக்கு மதுரை கிளையில் வரும்போது அவர் செல்வார் அன்று முடிவுக்கு வரும்

      அரசு தலைமை வழக்கறிஞர் உதவியாளர் கூறியவை

      சென்னை உயர்நீதிமன்றத்தில் அரத தலைமை வழக்கறிஞரை சந்திக்க சென்றபோது அனுமதி கிடைக்க வில்லை அவரது உதவியாளரை சந்தித்தோம் அவர் அரசு கூறினால் தலைமை வழக்கறிஞர் மதுரை செல்வார் அவரால் தனியாக முடிவு எடுத்து செல்ல முடியாது என்று கூறினார்

      பாதிக்கப்பட்ட நம் சார்பாக இருக்கும் வழக்கறிஞர் கூறியவை

      வழக்கு இறுதி நிலை எட்டி விட்டது தலைமை வழக்கறிஞர் ஆஜர் ஆனால் மட்டுமே முடிவுக்கு வரும்
      நாம் ஒரு நாள் நம் வழக்கிற்கு தேதி வாங்கலாம் ஆனால் அன்று தலைமை வழக்கறிஞர் ஆஜர் ஆகவில்லை என்றால் நீதிபதி வழக்கை நீண்ட நாள் தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளது

      அரசு தலைமை வழக்கறிஞர் மதுரை கிளை வருவதாக சொன்னால் அன்று எப்படியும் நீதிபதி முதல் 5 இடங்களுக்குள் தந்து விடுவார் வழக்கு முடிந்துவிடும் என்று கூறியுள்ளார்கள்

      எனவே நாம் செய்ய வேண்டியது அரசின் கவனத்தை ஈர்த்து அரசு தலைமை வழக்கறிஞரை மதுரை செல்ல வைக்க வேண்டும்

      அரசிற்கு பல பிரச்சனை எனவே அவர்கள் நம்மை மறந்து விட்டார்கள் நாம் அடையாள உண்ணாவிரதம் இருந்து அனைவரது கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்றால் மட்டுமே விரைவில் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும் இல்லை யெனில் அடுத்த கல்வியாண்டு தான் அதாவது ஜூன் மாதம் தான்

      உண்ணாவிரதத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்
      நாம் பணிக்கு விரைந்து செல்லும் நாட்களின் எண்ணிக்கை குறையும்

      நன்றி
      by ந . அகிலன் நடராஜன் : 8608224299
      ஜெகநாதன் :9442880680

      Delete
  2. Pg welfare kum oru poraattam Nadatha vendumoooo......??

    ReplyDelete
  3. Andrews sir nanga pg welfare lstla ulavanga ealam wednesday ketka porom mudinja vanga

    ReplyDelete
  4. Thanks admin and suruli sir, frds ellarum unnaviraththil ungalukaka kalanthu kollungal ,nanum ungaludan. Nandri

    ReplyDelete
  5. இந்த ஆண்டு உங்களுக்கு இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்......////////\\\\\\\\\

    ReplyDelete
  6. Adw and kallar frds thavira intha news padikira frds ellarum itha engalukaka share pannunga frds! nandri. Ungalukum nalla vali piraka valthukal

    ReplyDelete
  7. Valaku viraivaka mudiya nam anaivarum arasin kavanathai nammudaya pakkam eerkavendum, so ellarum news,comments mattum padichutu pokama,ungalukaka unnavirathathil kalathukanga frds. Unga frds kita solli avangalayum kooditu vanga.virudhunagar frds contact me 9865966398 nandri!

    ReplyDelete
  8. I whole heartily wish you all success

    ReplyDelete
  9. கடந்தமுறை கலந்து கொள்ளாத நண்பர்கள் இம்முறை கலந்துகொள்ளுங்கள் .குறிப்பாக பெண்கள் தங்களின் தொடர்பில் உள்ள தோழிகளை கண்டிப்பாக கலந்துகொள்ள செய்யுங்கள் .நன்றி

    ReplyDelete
  10. Adw sg list.....expected. frns...thayavu seithu vaanga....................................!....................................................................................illa athukkum mela.......

    ReplyDelete
  11. Senthilkumar sir, there is any chance for pg 2nd Adw list(already I finished CV,but due to one mark less in weitage I missed final list) please clear my doubt about 2nd list.

    ReplyDelete
  12. Nallathe nadakum. Porattathil anaivarum kalanthukolla vendum

    ReplyDelete
  13. ஆதிதிராவிடர் நலத்துறை (669) ஆசிரியர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்?????????????????

    ReplyDelete
  14. oct 9 ramar case file seithaar......October 26 sudalai mani case. file seithaar.........paniniyamana Thaddai seyyalpattathu.........dec 5 rendu case um ondraga inaikappattahu......dec 10 end kku varm nu.......kanavu kondom.....aaaanaaal indru. varai. athu migaperiya. eemaatramasgave. aagivitathu.....

    ReplyDelete
  15. வாழ்க்கையில் ஏமாற்றம் வரலாம்...ஆனால் எங்களுக்கு adw( sg tr 669)ு ஏமாற்றமே வாழ்க்கையாகி விட்டது........்

    ReplyDelete
  16. வாழ்க்கையில் ஏமாற்றம் வரலாம்...ஆனால் எங்களுக்கு adw( sg tr 669)ு ஏமாற்றமே வாழ்க்கையாகி விட்டது........்

    ReplyDelete
  17. Government in வேகம் Engalukkellam miga pperiya சோகம்...

    ReplyDelete
  18. வீடு வரை DTED... வீதீ வரை TET.... காடு வரை WEIGHTAGE...கடைசி வரை ??????????(CASE)

    ReplyDelete
  19. வீடு வரை DTED... வீதீ வரை TET.... காடு வரை WEIGHTAGE.. கடைசி வரை ??????????(CASE)...

    ReplyDelete
  20. ஆதிதிராவிட நலத்துறை , பிரமிலை கள்ளர் பள்ளிகள் நியமனம் தாமதத்திற்கான காரணம் மற்றும் விரைந்து பணி நியமனம் முடிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள்
    இதுவரை என்ன நடந்தது இனி என்ன நடக்கும் ஒரு பார்வை

    வழக்கின் தற்போதய நிலை

    சகோதரர் திரு ராமர் , சகோதரர் திரு சுடலை மணி இருவர் தொடர்ந்த வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது இட ஒதுக்கீடு மற்றும் மாநில அரசின் கொள்கை முடிவு , தமிழக அரசின் தாழ்த்தப்பட்டோருக்கான முன்னுரிமை சம்பந்தமான வழக்கு என்பதால் அரசு தலைமை வழக்கறிவர் நீதிமான் ஐயா சோமையா ஜி அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜர் ஆனால் தான் வழக்கு முடிவுக்கு வரும்

    இது சம்பந்தமாக 4 முறை சென்னை சென்று தமிழக அரசிடம் முறையிட்டதற்கு அவர்கள் கூறிய பதில்கள்

    பள்ளிக்கல்வி துறை செயலர் கூறியவை

    வழக்கு விரைந்து முடிக்க அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டது நீதிமன்றத்தை அரசு நிர்பந்திக்க முடியாது வழக்கு வரும்போது முடிந்துவிடும்

    முதலமைச்சர் தனிப்பிரிவில் கூறியவை

    வழக்கு விரைந்து முடிக்க அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டது நீதிமன்றத்தை அரசு நிர்பந்திக்க முடியாது வழக்கு வரும்போது முடிந்துவிடும் அவர்கள் இருவர் வழக்கு தொடரும் போது நீங்கல் 669 பேர் அந்த வழக்கில் இணைந்து வழக்கு விரைந்து முடிக்க முயற்சி பண்ணுங்களேன்

    ஆசிரியர் தேர்வு வாரியம்

    வழக்கு விரைந்து முடிக்க அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டது நீதிமன்றத்தை அரசு நிர்பந்திக்க முடியாது வழக்கு வரும்போது முடிந்துவிடும்

    ஆதிதிராவிட நலத்துறை

    மதுரை யில்யில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை கிளை யில் உள்ளவர்கள் வழக்கின் நிலையை கவனித்து கொண்டு வருகின்றனர் வழக்கை விரைந்து முடித்து பணி நியமனம் செய்து விடுவோம் இந்த வழக்கால் நலத்துறை பல பிரச்சனையை சந்திக்கிறது உங்களை விட நாங்கள் இவ்வழக்கை முடிக்க அனைத்து வேலைகளும் செய்துவிட்டோம்
    அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக சொல்லி அரசாணை எல்லாம் போட்டு விட்டோம் வழக்கு மதுரை கிளையில் வரும்போது அவர் செல்வார் அன்று முடிவுக்கு வரும்

    அரசு தலைமை வழக்கறிஞர் உதவியாளர் கூறியவை

    சென்னை உயர்நீதிமன்றத்தில் அரத தலைமை வழக்கறிஞரை சந்திக்க சென்றபோது அனுமதி கிடைக்க வில்லை அவரது உதவியாளரை சந்தித்தோம் அவர் அரசு கூறினால் தலைமை வழக்கறிஞர் மதுரை செல்வார் அவரால் தனியாக முடிவு எடுத்து செல்ல முடியாது என்று கூறினார்

    பாதிக்கப்பட்ட நம் சார்பாக இருக்கும் வழக்கறிஞர் கூறியவை

    வழக்கு இறுதி நிலை எட்டி விட்டது தலைமை வழக்கறிஞர் ஆஜர் ஆனால் மட்டுமே முடிவுக்கு வரும்
    நாம் ஒரு நாள் நம் வழக்கிற்கு தேதி வாங்கலாம் ஆனால் அன்று தலைமை வழக்கறிஞர் ஆஜர் ஆகவில்லை என்றால் நீதிபதி வழக்கை நீண்ட நாள் தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளது

    அரசு தலைமை வழக்கறிஞர் மதுரை கிளை வருவதாக சொன்னால் அன்று எப்படியும் நீதிபதி முதல் 5 இடங்களுக்குள் தந்து விடுவார் வழக்கு முடிந்துவிடும் என்று கூறியுள்ளார்கள்

    எனவே நாம் செய்ய வேண்டியது அரசின் கவனத்தை ஈர்த்து அரசு தலைமை வழக்கறிஞரை மதுரை செல்ல வைக்க வேண்டும்

    அரசிற்கு பல பிரச்சனை எனவே அவர்கள் நம்மை மறந்து விட்டார்கள் நாம் அடையாள உண்ணாவிரதம் இருந்து அனைவரது கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்றால் மட்டுமே விரைவில் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும் இல்லை யெனில் அடுத்த கல்வியாண்டு தான் அதாவது ஜூன் மாதம் தான்

    உண்ணாவிரதத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்
    நாம் பணிக்கு விரைந்து செல்லும் நாட்களின் எண்ணிக்கை குறையும்

    நன்றி
    by ந . அகிலன் நடராஜன் : 8608224299
    ஜெகநாதன் :9442880680

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி