பாலிடெக்னிக் கல்லூரி காலிப் பணியிடம்: பதிவு மூப்பு சரிபார்க்க இன்றே கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2015

பாலிடெக்னிக் கல்லூரி காலிப் பணியிடம்: பதிவு மூப்பு சரிபார்க்க இன்றே கடைசி


திருவண்ணாமலையை அடுத்த நாகாப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 19 திறன்மிகு உதவியாளர், ஆய்வக உதவியாளர் பணிகளுக்கான பதிவு மூப்புப்பட்டியலை புதன்கிழமை (ஜனவரி 28) மாலைக்குள் சரிபார்த்துக் கொள்ளலாம்.இதுதொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.பேபி சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளதாவது:
காலிப் பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டர்னர், ஃபிட்டர், மெஷினிஸ்ட், ஏ.சி. மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட்மெக்கானிக், டிராஃப்ட்ஸ்மேன் (மெக்கானிக்), டிராஃப்ட்ஸ்மேன் (சிவில்), சர்வேயர், மெக்கானிக் (டீசல்), மெக்கானிக் (மோட்டார் வாகனம்) உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.2014 ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி, எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ. வகுப்பினர்41 வயதுக்கு உள்பட்டவராகவும், எம்.பி.சி, பி.சி, பி.சி.எம் வகுப்பினர் 38 வயதுக்கு உள்பட்டவராகவும், ஓ.சி. வகுப்பினர் 36 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.இந்தத் தகுதியுடைய பதிவுதாரர்களின் பெயர்கள் அடங்கிய பதிவு மூப்புப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பதிவுதாரர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விளம்பரப் பலகையில் உள்ள பதிவு மூப்புப் பட்டியலை புதன்கிழமை (ஜனவரி 28) மாலைக்குள் சரிபார்த்துக் கொள்ளலாம்.பதிவு மூப்புப் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் தங்களது அசல் கல்விச் சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை அணுகிப் பயன்பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி