விருதுநகரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2015

விருதுநகரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்


விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்பயனடையும் வகையில் வருகிற 30ம் தேதி(வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்புமுகாம் நடைபெற இருக்கிறது.இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்தி:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு முகமையின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் தரும் வகையில் விருதுநகர் சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து 2 மணி வரையில் நடைபெற இருக்கிறது.இம்முகாமில் தமிழகம் முழுவதும் உள்ள பிரபல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். அதனால் இம்மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம்.இம்முகாமில் தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு அன்றைய தினமே பணிக்கான உத்தரவும் அளிக்கப்பட இருக்கிறது. இதுபோன்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பலர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களின் பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. அதனால் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் இம்முகாமில் பங்கேற்று தங்களின் வாழ்வாதரத்தை உயர்த்திக் கொள்ளுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி