அரசு அலுவலகங்கள் இன்று இயங்குமா?: ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2015

அரசு அலுவலகங்கள் இன்று இயங்குமா?: ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்


'திட்டமிட்டபடி, இன்று, ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடக்கும்' என, அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதற்கேற்ப ஊழியர்களும், விடுப்பு கடிதம் கொடுத்துள்ளனர். இதனால், அரசு அலுவலகங்கள் இன்றுஇயங்குமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

15 அம்ச கோரிக்கை:

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும்; அரசுத் துறைகளில் தனியார் மயத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. அரசு கண்டு கொள்ளாததால், 'ஜனவரி, 22ம் தேதி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்படும்' என, அனைத்து துறை பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்தது. போராட்டத்தால், அரசுப் பணிகள் முடங்கும் என்பதால், கடைசி நேரத்திலாவது அரசு, சங்கங்களை அழைத்து பேச்சு நடத்தி, சிக்கலுக்கு தீர்வு காணும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று மாலை வரை, அரசு தரப்பில் இருந்து, பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் வரவில்லை.

இது குறித்து, அனைத்து துறை பணியாளர் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: அரசுக்கு நீண்ட அவகாசம் தரப்பட்டது. கடைசி நேரத்திலாவது சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி தீர்வு கண்டிருக்கலாம். அரசு தொடர்ந்து மெத்தனமாக உள்ளது. 'விடுப்பு எடுக்கக்கூடாது' என, சுற்றறிக்கையும் அனுப்பி வருகிறது. வேறு வழியின்றி திட்டமிட்டபடி, இன்று, தற்செயல் விடுப்பு போராட்டம் நடக்கும். மாநிலத்தில் உள்ள, நான்கு லட்சம் அரசு ஊழியர்களில், 2.5 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்பர். விடுப்பு கடிதத்தை, அலுவலக பொறுப்பாளர்களிடம் கொடுத்து விட்டனர். வருவாய்த்துறை, வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சித்துறை என, 40க்கும் மேற்பட்ட துறைகளின் பணிகள் முடங்கும். இதற்கு நாங்கள் பொறுப்பல்ல; அரசு தான் காரணம். இவ்வாறு, அவர் கூறினார்.அறிவிப்பு: அரசு அலுவலர் ஒன்றியம், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்பது இல்லை என, அறிவித்துள்ளன.

தலைமை செயலக சங்கம் புறக்கணிப்பு:

''இன்று நடக்கும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில், தலைமைச் செயலக ஊழியர்கள் பங்கேற்கவில்லை,'' என, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் கணேசன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று, தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி