டி.இ.டி., மதிப்பெண் பட்டியலுக்கு சி.இ.ஓ., அலுவலகத்தை நாடலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2015

டி.இ.டி., மதிப்பெண் பட்டியலுக்கு சி.இ.ஓ., அலுவலகத்தை நாடலாம்


ஆசிரியர் தகுதித் தேர்வான, டி.இ.டி., 2013 தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ்பெறாதவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ.,வை அணுகலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: டி.ஆர்.பி.,யால், 2012 - 13ல் நடத்தப்பட்ட, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இதை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து,'பிரின்ட் அவுட்' எடுத்துக் கொண்டனர். சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாததேர்வர்களின் சான்றிதழ்கள் மட்டும், பதிவிறக்கம் செய்யப்பட்டு, தேர்வர்கள்,தேர்வு எழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட, முதன்மை கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அந்த தேர்வர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை நேரில் அணுகி, பிப்., 14ம் தேதி வரை, அனைத்து வேலை நாட்களிலும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். டி.இ.டி., 2013 தேர்வில், குறைந்த பட்சம், 90 மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 comment:

  1. TRB HAS NOT UPLOADED TNTET PASS CERTIFICATES TO THOSE WHO BECAME ELIGIBLE BY PRODUCING THE CERTIFICATES IN CLARIFICATION CAMP AND THEY HAVE NOT SENT THE CERTIFICATES TO THE CEO OFFICE. KALVISEITHI PLEASE RAISE YOUR VOICE FOR US.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி