பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு: நள்ளிரவு முதல் அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2015

பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்


பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் பெட்ரோல்மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பும்வரி உயர்வும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
விலை குறைப்புக்குப்பின் சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2 ரூபாய் 56 பைசா குறைக்கப்பட்டு 61 ரூபாய் 38 பைசாவிற்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 44 பைசா குறைக்கப்பட்டு 51 ரூபாய் 34 பைசாவிற்கு விற்கப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. இருப்பினும், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி உள்ளது. அதனால், கச்சா எண்ணெய் விலை குறைவின் பலன் நுகர்வோருக்கு முழுமையாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

6 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி