எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேசிய திறனாய்வுத் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2015

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேசிய திறனாய்வுத் தேர்வு


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு சனிக்கிழமை (ஜன. 24) நடைபெற இருப்பதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய மாணவ, மாணவிகள் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.500 பெறும் வகையில், தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பங்கேற்பதற்கு, நிகழாண்டில் 8ஆம் வகுப்பு படித்து வருபவராக இருக்கவேண்டும்.இத்தேர்வை எழுத, இம்மாவட்டத்தைச் சேர்ந்த 267 பள்ளிகளில் இருந்து 4,809 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்காக, விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை,நரிக்குடி, காரியாபட்டி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் 17 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இத்தேர்வு கடந்த டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ஜனவரி 3ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின்னரும் தேதி மாற்றப்பட்டு, தற்போது ஜனவரி 24ஆம் தேதி நடைபெறுகிறது.பெயர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்பட இருப்பதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி