பள்ளிக்கல்வி செயலருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2015

பள்ளிக்கல்வி செயலருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


விருதுநகரைச் சேர்ந்தவர் ராமநாத சேதுபதி. இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ‘‘மதுரை அரும்பனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்150 பேர் படிக்கின்றனர்.
இங்கு 2010ல் 6, 7, 8ம் வகுப்புக்கு ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் புது கட்டிடம் கட்டப்பட் டது.ஆனால் சில மாதங்களிலேயே கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. கட்டிடத்தின் ஒருபகுதி பூமிக்குள் புதைந்தது. புது கட்டிடம் கட்டப்பட்டதில் பெருமளவு மோசடிநடந்துள்ளது.

இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’’. இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர்நேற்று விசாரித்து, பள்ளிகல்வித்துறை செயலர், மதுரை கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை பிப்.2ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி