துணிதுவைக்க கையடக்கக் கருவி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2015

துணிதுவைக்க கையடக்கக் கருவி


துணிகளை கைகளால் துவைத்த காலம் மாறி, வாஷிங் மெஷின் கைகொடுக்கும் நிலை இப்போது உள்ளது. அதுவும் விரைவில் மாறி, மிக எளிதான வசதி வரப் போகிறது.

அதற்கான கையடக்க கருவியை சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

டோல்ஃபி எனப்படும் இந்தக் கருவி, சோப் அளவில்தான் இருக்கிறது. அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தக் கருவியை பயன்படுத்தி துணி துவைக்க, சமையலறை சிங்க் போன்ற ஒரு சிறிய தொட்டி போதுமானது. அதில் நீரை நிரப்பி துணிகளைப் போட்டு, சலவைத் தூளை போட வேண்டும். பிறகு, இந்தக் கருவியை உள்ளே போட்டு விட்டால் நீரில் அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தில் ஒலி அதிர்வுகளை ஏற்படுத்தும். நீரில் அது குமிழ்களை ஏற்படுத்தி, துணிகளில் இருந்து கரைகளை வெடிக்கச் செய்து வெளியே எடுத்து விடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கைகளால் தேய்க்கவோ, நீரில் ஊற வைக்கவோ அவசியமில்லாமல் 30 நிமிடத்தில் துணிகளை டோல்ஃபி கருவி பளிச்சென மாற்றிடும் என்கின்றனர். இதன் வணிக ரீதியான தயாரிப்பு வருகிற 20ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அடிக்கடி பயணம் செய்வோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் 6 ஆயிரம் வரை இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி