சிக்கலில் தவிக்கும் நாட்டின் முதல் உடற்கல்வி பல்கலை: துணைவேந்தர் இல்லை; துறைகள் இணைப்பு சரியில்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2015

சிக்கலில் தவிக்கும் நாட்டின் முதல் உடற்கல்வி பல்கலை: துணைவேந்தர் இல்லை; துறைகள் இணைப்பு சரியில்லை


துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோர் நியமிக்கப்படாதது, துறைகளைமாற்றி இணைத்தது போன்ற பிரச்னைகளால், தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகம், இடியாப்ப சிக்கலில் தவித்து வருகிறது.
முதல் முறையாக:

கடந்த முறை, அ.தி.மு.க., ஆட்சியில், 2005ல், நாட்டிலேயே முதல் முறையாக,விளையாட்டுக்கு என தனியாக, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகம் துவக்கப்பட்டது. துவக்கத்தில், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில்இந்த பல்கலை செயல்பட்டது. பின், காஞ்சிபுரம் மாவட்டம், மேல கோட்டையூருக்கு மாற்றப்பட்டது. அங்கு, மிகப்பெரிய வளாகம் இருந்தும், பாதுகாப்பில்லாத சூழல்காணப்படுகிறது.

* நிரந்தர துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் தொலைதூரக் கல்வி அதிகாரி இல்லாமல், அனைத்து பதவிகளும், பொறுப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

* பொறுப்பு துணைவேந்தராக இருக்கும், கிரேஸ் ஹெலினா, துணைவேந்தரின் முழு பதவிக்காலமான, மூன்றாண்டை நெருங்கிவிட்டார். நான்கு ஆண்டுகளாக, பதிவாளர்; ஏழு ஆண்டுகளாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி; ஒன்பது ஆண்டுகளாக, தொலைதூரக்கல்வி இயக்குனர் நியமிக்கப்படவில்லை.

* நிதி சிக்கல், ஊழியர் பதவி உயர்வு, பேராசிரியர் நியமனம், மாணவர்களுக்கு புதிய வசதி களை ஏற்படுத்துதல் போன்றவை பாதிக்கப்பட்டு உள்ளது.

* துவக்கத்தில், உடற்கல்வி, யோகா, விளையாட்டு மேலாண்மை, தொழில்நுட்பம் என, எட்டு துறைகள் இருந்தன. சமீபத்தில், ஒருசில துறைகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு,ஐந்தாக குறைக்கப்பட்டு விட்டது

இதுகுறித்து, உடற்கல்வி வல்லுனர்கள் கூறியதாவது:துறைகளை ஒருங்கிணைப்பதில் தவறில்லை. அதே நேரம், சிக்கல் வராமல் இருக்க வேண்டும். தனித்தனியாக இருந்த, பயோ மெக்கானிக்ஸ், உடற்பயிற்சி; உடற்கூறியல்துறைகள் இணைக்கப்பட்டன. பயிற்சி துறை மற்றும் விளையாட்டு தொழில்நுட்ப துறை; சமூகவியல், மனோதத்துவ இயல் மற்றும் விளையாட்டு மேலாண்மை துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

இதில், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை சார்ந்த துறைகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் - ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டிலும், மற்ற துறைகள், பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., கட்டுப்பாட்டிலும் வருகின்றன.

வசதி இல்லை:

துறைகளை மாற்றி இணைத்து உள்ளதால், இரண்டு அமைப்புகளில் இருந்தும், நிதி மற்றும் இதர உதவிகளை பெறுவதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. போதுமான தளவாட பொருட்கள், மைதானம், சாலை வசதி இல்லை என, மாணவர்கள் குற்றம் சாட்டுகினறனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி