நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்துக்கு பத்ம விருதுகள்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2015

நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்துக்கு பத்ம விருதுகள்?


யோகா மாஸ்டர் ராம்தேவ், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட 148பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு துறைகளில் நாட்டிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது.

இதன்படி, இந்த ஆண்டு 148பேருக்கு பத்ம விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் ஆகிய இருவரும் விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. யோகா மாஸ்டர் ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், நடிகர்கள் திலிப்குமார், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோரும் விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

விளையாட்டுத் துறையைப் பொறுத்த வரை ஹாக்கி அணியின் கேப்டன் சர்தாரா சிங், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, செஸ் கிராண்ட் மாஸ்டர் கிருஷ்ணன் சசிகிரண், மல்யுத்த வீரர் சுஷில்குமார் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில்இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் அருணன், ஷிவ்குமார் ஆகியோருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.​

4 comments:

  1. Akilan sir pg welfare list pati solunga

    ReplyDelete
  2. Please upload 10 science Practical materials.

    Thanking you......

    ReplyDelete
  3. Please anybody upload 10 science Practical

    materials.

    Thanking you......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி