பொங்கல் விடுமுறையில் வகுப்பு: பெற்றோர் அதிர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2015

பொங்கல் விடுமுறையில் வகுப்பு: பெற்றோர் அதிர்ச்சி


சேலத்தில், ஒரு சில தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், பொங்கல் விடுமுறையிலும் செயல்பட்டது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், முக்கிய திருவிழா மற்றும் பண்டிகை சமயங்களில், அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதில், அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. சில தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், 'சிறப்பு வகுப்பு' என்ற பெயரில், பள்ளிக்கு, குழந்தைகளை வர கட்டாயப்படுத்தும் சூழல் நிலவி வருகிறது.

தமிழகத்தில், பொங்கல் பண்டிகைக்காக, ஜனவரி, 15, 16, 17ம் தேதிகளில், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் சில பள்ளிகள், நேற்று, சிறப்பு வகுப்பு நடத்தின. இச்சம்பவம் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தகவல் அறிந்த, மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமையிலான, பா.ஜ.,வினர், சேலம் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, உடனடியாகசிறப்பு வகுப்புகளை ரத்து செய்து, மாணவ, மாணவியரை அனுப்பி வைக்கும்படி, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி