தனியார் பள்ளி நிர்வாகங்கள் கெடுபிடி: அரசு தேர்வு எழுத சென்ற ஆசிரியர்களுக்கு ‘மெமோ’ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2015

தனியார் பள்ளி நிர்வாகங்கள் கெடுபிடி: அரசு தேர்வு எழுத சென்ற ஆசிரியர்களுக்கு ‘மெமோ’


முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பங்கேற்க சென்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சில பள்ளி நிர்வாகங்கள் விடுமுறை வழங்கவில்லை. மீறி சென்றவர் களுக்கு பள்ளி நிர்வாகம் விளக் கம் கேட்டு ‘மெமோ’ வழங்கியுள் ளது. இதனால், இதுபோன்ற தேர்வுகளை விடுமுறை நாட்களில் நடத்த வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 10-ம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருவள் ளூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் இத்தேர்வு எழுதினர். சனிக்கிழமை இத்தேர்வு நடைபெற்றதால் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்து இத்தேர்வில் பங்கேற்றனர்.சில பள்ளிகளில் வேண்டு மென்றே அன்றைய தினம் பணிக்கு வரச் சொல்லி நிர்பந்தப்படுத்தியுள்ளனர். வராதவர்களுக்கு பள்ளி நிர்வாகம் ‘மெமோ’ வழங்கியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: சில பள்ளிகளில் அரை நாள் மட்டுமே விடுமுறை அளித்தனர். இதனால், தேர்வு முடிந்ததும் அவசர அவசரமாக பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பெண் ஆசிரியர்கள் சிரமப்பட்டனர்.மேலும், சில பள்ளிகளில் அன்றைய தினம் வேலைக்கு வராதவர்களிடம் விளக்கம் கேட்டு மெமோ வழங்கியுள்ளது. எனவே, இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க விடுமுறை நாட்களில்ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்த வேண்டும் என்றனர்.

4 comments:

  1. private school are not interested in the development of their staff economically

    ReplyDelete
  2. private school are not interested in the development of their staff economically

    ReplyDelete
  3. The memo given staff should resign their job immediately and join another school then only private schools will respect the teachers

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி