உலகிலேயே அதிக விடுமுறை தினங்கள் கொண்ட நாடு இந்தியா! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2015

உலகிலேயே அதிக விடுமுறை தினங்கள் கொண்ட நாடு இந்தியா!


பொதுவாக வளர்ந்து வரும் நாடுகளில் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் விடுமுறை தினங்கள் மற்ற நாடுகளை காட்டிலும் குறைவாக உள்ளதாக நினைப்பதுண்டு. ஆனால், உண்மையில் காலண்டரை வைத்து பார்க்கும் போது உலகிலேயேஅதிக பொது விடுமுறை தினங்களை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது.
ஓர் ஆண்டுக்கு 21 நாட்களை பொது விடுமுறை தினங்களாக கொண்டுள்ள இந்தியா, ஒவ்வொரு மாநிலங்களிலும் கொண்டாடப்படும் பண்டிகைகளை கொண்டு கணக்கிட்டால் இன்னும் அதிகமாக கூட வரலாம். பிரபல ஆன்லைன் டிராவல் வெப்ஸைட் வீகோ நடத்தியஆய்வில், பிலிப்பைன்ஸ், சீனா, ஹாங் காங், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் நாடுகளை காட்டிலும் இந்தியா அதிக விடுமுறைகளை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உலக நாடுகளின் விடுமுறை தின பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா - 21
பிலிப்பைன்ஸ் - 18
சீனா, ஹாங்காங் -17
தாய்லாந்து -16
மலேசியா, வியட்நாம் - 15
இந்தோனேசியா- 14
தைவான், தென்கொரியா-13
சிங்கப்பூர்-11
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து-10
செர்பியா, ஜெர்மனி-9
பிரிட்டன், ஸ்பெயின்-8
மெக்ஸிகோ-7

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி