TET-2013: 82 முதல் 89 வரைமதிப்பெண்கள் பெற்று பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்குவதுகுறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்-TRB வசுந்தராதேவி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2015

TET-2013: 82 முதல் 89 வரைமதிப்பெண்கள் பெற்று பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்குவதுகுறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்-TRB வசுந்தராதேவி தகவல்

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சான்றிதழ்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012–2013–ல் நடத்தப்பட்ட ஆசிரியர்தகுதி தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர்கள் பதிவு இறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14–ந்தேதி கடைசி

தேர்வர்கள் தேர்வு எழுதிய மாவட்டத்தின் அடிப்படையில், அந்த அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்றுமுதல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பிப்ரவரி 14–ந்தேதி கடைசி நாள்.சென்னை மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

இறுதி தீர்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அரசால் தொடரப்பட்ட சீராய்வு மனுவின் மீது பெறப்படும் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் 82 முதல் 89 வரைமதிப்பெண்கள் பெற்று பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்குவதுகுறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

25 comments:

  1. இரண்டாவது பட்டியல் வருவதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Delete
  2. Is there any news about pg answer key please share me if anyone knows

    ReplyDelete
  3. Any other exams calfer from TRB. AEEO POLY ENGINEERING TET Any news pls send anybody admin sir.

    ReplyDelete
  4. Replies
    1. வச்சா உடனே பாஸ் பன்னிட்ரா மாதிாி ஏண்டா சீனா போடுரீங்க..... ஏற்கனவே பாஸ் பன்னிட்டு ஏகபட்ட போ் உட்காா்ந்து ஈ ஓட்டிட்டு இருக்கோம். இதுல நீங்க வேற....

      Delete
    2. Summa unkuda sandhu ottalamla adan exam edhirpakrom

      Delete
  5. மாலை வணக்கங்கள்.அடுத்ததாக TNPSC ல் என்ன அறிவிப்பு வரூம் ?GROUP1 OR 2?

    ReplyDelete
  6. BC SOCIAL SCIENCE 1 VACANT IN CHENNAI
    LADIES ONLY pls contact kathir202020@gmail.com

    ReplyDelete
  7. MR mani sir how are you and your family members

    ReplyDelete
  8. Can anybody tell the expected BC cut off
    for PGTRB-English subject.

    ReplyDelete
  9. Tet 2015 calfer come June LA come...
    .

    ReplyDelete
    Replies
    1. Ippa Ena than pannalam sir...... Padikaum vendama....

      Delete
  10. 2015 tet varuvathu doubt thhaan.oru. expectation LA than yellarum tet varuthu nu solranga.but i thing no new Calfer idea to tamilnadu government..............

    ReplyDelete
  11. Tet um varaathu.... second list um varaathu.... namakku nimmathiyum varaathu.....

    ReplyDelete
  12. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி