CPS: பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2015

CPS: பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு.


புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டம் 2003 ஏப்., 1ல் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை, இரண்டு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஊதியத்திற்கு தகுந்தாற்போல் கருவூலத்திலிருந்து மாதந்தோறும் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தில் சேர்ந்து 2009 க்கு பின் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை. தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் தொடக்கல்வித்துறையில் ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த, 79 ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையில் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 247 ஆசிரியர்களுக்கும் பணப்பலன் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஓய்வுபெற்ற ஆசிரியர்களும், உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்ற திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் ஜெபஜேம்ஸ் கூறியதாவது: பொதுநல நோக்கத்துடன் தகவல்களை கேட்டு பெற்றேன். புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணப்பலன் கொடுப்பது தொடர்பாக எந்த அரசு உத்தரவும் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த பணத்தை கூட வழங்காதது அதிர்ச்சியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து, அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றவேண்டும். அப்பொழுதுதான் அரசு ஊழியர்கள் முதுமைக் கால பயமின்றி மன நிம்மதியுடன் பணியாற்ற முடியும். அதுதான் வளமான இந்தியாவை, வளமான தமிழ்நாட்டை உருவாக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி