PGTRB-2015: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2015

PGTRB-2015: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு.


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான எழுத்துத் தேர்வை கடந்த 10 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.சுமார் 2 லட்சத்துக்கும்அதிகமானோர் இத்தேர்வை எழுதினர்.தேர்வுக்கான சரியான விடையை ஆசிரியர் தேர்வுவாரியம் 2 நாட்களுக்கு முன் வெளியிட்டது.
இந்நிலையில் விடைகள் பற்றிய ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் வருகிற 29ந் தேக்குள் அதற்கான ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து ஆட்சேபணை விண்ணப்பங்களையும் இறுதி நாளன்று பெற்ற பிறகு டிஆர்பி அவர்றை பரிசீலனை செய்யும்.அதன்பிறகு இறுதிவிடைகள் இணையதளத்தில் வெளியிடப்படும். விடைத்தாட்களை சரி செய்வதில் ஏற்படும் பிழைகளைத் தடுக்க ஒவ்வொரு விடைத்தாளும் 2 முறை ஸ்கேன் செய்யப்படும் என்றும் அதன் பிறகு தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்றும் டிஆர்பி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம் ஸ்ரீரங்கம் தொகுதி மனுத்தாக்கல் ;பிராச்சாரத்துக்கு தாயாராகுவோம்,பணிநியமனத்தை வென்றெடுப்போம்

    இன்று மதியம் 3மனிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழக மாநில தலைவர் செல்லத்துரை திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் மனுதாக்கல் செய்தார்...

    ஆசிரியர் பணிநியமங்களில் பின்பற்றப்படும் வெய்ட்டேஜ் என்னும் ஆசிரியர்களின் இரத்தம் குடிக்கும் முறையை எதிர்த்தும்,2014ம் ஆண்டு முதலில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பணிநியமனம் செய்ய வலியுறுத்தியும் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளோம்...

    1.இன்று தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் தான் பார்த்த தனியார் பள்ளி வேலையையும் இழந்து,சமூகத்தில் ஒதுக்கப்பட்டு மரணவாசலின் ஓரத்தில் நிறபதை யார் அறிவார்??

    2.என் அருமை ஆசிரியை சகோதரிகள் ஏமாற்றத்தால் திருமணம் தடைபட்டு முதிர்கன்னிகளாக இருக்கும் அவலநிலையை யார் அறிவார்???

    3.ஒவ்வொரு சமூக பிரச்சனையும் தீர்ப்பதற்கு உயர்நீதிமன்றமே முன்வருகிறது ஆனால் பல லட்சம் ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து இருட்டறையில் புலம்புவது நீதிதேவதைக்கு கேட்கவில்லையா??இதை தீர்க்க வழி இல்லையோ??

    4.தினமும் அரசு நமக்கு செய்த வெய்ட்டேஜ் துரோகத்தால் சாப்பிடாமல்,தூங்காமல் கிறுக்கனாக மாறிக்கொண்டிருக்கும் அவத்தை யார் அறிவாரோ???

    அலையாய் புறப்படு என் ஆசிரியர் இனமே!!

    திரண்டு வா திருச்சிக்கு!! திணரட்டும் திருச்சி ..

    நம் பிரச்சரம் வெய்ட்டேஜை குறைபாடுகளை மக்களுக்கு புரிய வைத்து நீதி வேண்டும் என்பதே...

    உணைவோடு இந்த செய்தியை வாட்ஸப்,பேஸ்புக், பத்திரிக்கையாளருக்கு, மீடியாவுக்கு, அனைவருக்கும் உடனடியாக பகிரவும்...

    எழுச்சியோடு
    செல்லத்துரை மாநிலத்தலைவர் செல்:98436 33012

    பி.ராஜலிங்கம் மாநிலப்பொருளாளர் செல்/வாட்ஸப் 9543079848

    Share pls pls pls lot...
    www.pallikudam.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி