பெண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் மத்திய அரசு தொடங்குகிறது புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட் ( SSA ) - 22.01.2015 முதல் அமுலாகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2015

பெண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் மத்திய அரசு தொடங்குகிறது புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட் ( SSA ) - 22.01.2015 முதல் அமுலாகிறது.


1) 10 வயது வரை உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்காக இந்த கணக்கு தொடங்கலாம்

2)குறைந்தபட்ச முதலிடு ரூபாய் 1000

3).ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை சேமிக்கலாம்.

4.)குழந்தையின் 21 வது வயதில் கணக்கை முடிக்கலாம்

5. )Nomination வசதி கிடையாது .

6.)ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூபாய் 1000 கண்டிப்பாக முதலிடு செய்ய வேண்டும்

7)இந்த ஆண்டு வட்டி 9 .1%

5 comments:

  1. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வணக்கம்.
    ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நல பள்ளி பணியிடத்திற்கு காத்திருக்கும் அனைத்து ஆசிரியர்களும் நாளை தவறாமல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நடிபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். நமது வழக்கினை விரைந்துமுடிக்க நமது சகோதரர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறுவது நமது கையில் உள்ளது என்பதனை அறிந்துகொள்ளுங்கள். சகோதரர் அகிலன் மற்றும் சகோதரர் ஜெகன் ஆகிய இருவரும் இன்று காலை முதல் சென்னையில் உள்ள பல முக்கிய அரசியல் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்களை உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு கொடுத்துள்ளனர். அதில் சிலர் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர். ஆகவே நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள். அனைவரும் வழக்கு செலவிற்காக தலா ரூபாய் 100 கொடுத்து உதவுமாறும் தங்களை அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

    ReplyDelete
  2. வேறு பணியில் உள்ள நண்பர்கள் ஒரு நாள் விடுப்பில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். ஒரு நாள் ஊதியம் தான் நண்பர்களே இழப்பு ஏற்படும். உங்களுக்கு ஊதிய பிரச்சனை இல்லை .அலச்சியம் .தயவு செய்து இதை அலட்சியமாக எண்ணாமல் கலந்து கொள்ளுங்கள். போராட்டம் என்பதால் ஏதேனும் சிக்கல் வந்துவிடும் என எண்ண வேண்டாம். சென்னை கமிஷனரிடம் முறையான அனுமதி பெற்ற பின்தான் போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டது. இது அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. அரசின் கவனத்திற்கு நமது நிலையை எடுத்து செல்லும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாட்டுமே. விடா முயற்சிக்கு வெற்றிகிட்டும். அதற்கு தங்களின் மேலானா பங்களிப்பு அளிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

    ReplyDelete
  3. ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளி பணிக்காக காத்திருக்கும் நண்பர்கள் மொத்தம் 733 பேர் உள்ளீர்கள். ஆனால் யாரும் கவலையோ அக்கறையோ படுவதாக தெரிவதில்லை. சில நண்பர்கள் கேள்வியை மற்றும் தொடுக்குறீர்கள். ஆனால் எந்த பங்களிப்பும் தராமல் இருப்பது வருத்தமாக உள்ளது. அனைத்து நண்பர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் தங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.... உங்களை சார்ந்தே எங்களது முயற்சி இருப்பதால் உங்கள் பங்களிப்பினை அளிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

    ReplyDelete
  4. சென்னை வரும் நண்பர்கள் மற்ற நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். நாளை (29.01.2015) காலை 7 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து விடுங்கள். உங்களுக்கு முகவரி தெரியும் எனில் போராட்ட களத்திற்கு சென்றுவிடுங்கள். நாளை வரும் அனைத்து நண்பகலுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  5. உண்ணாவிரத போராட்ட அழைப்பு
    அனுப்புனர்:
    நண்பர்கள்
    ந.அகிலன், புதுக்கோட்டை
    ஜெகநாதன் , தேனி
    ஹரிகிருஷ்ணன், சென்னை
    ரமேஷ் ,நாமக்கல்.
    செந்தில். சேலம்.
    பழனி, திருவண்ணமலை.
    பெறுநர்;
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற (SC&SCA மற்றும் பிரமலை-கள்ளர்) இடைநிலை ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள்,கல்வியாளர்கள்.

    சகோதர, சகோதரிகளே,
    21.8.2014ஆம் தேதியன்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவிப்பு எண் 06/2014 -ல் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்ற SC & SCA ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என்றும் பிரமலை-கள்ளர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள 64 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் பிரமலை-கள்ளர் சமுகத்தினருக்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. ஆனால் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இது நாள் வரை ஆதிதிராவிட நலப்பள்ளிகள் மற்றும் கள்ளர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள 669+64 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் இது வரை நிரப்பப்படவில்லை. இக்கால தாமதத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையிலுள்ள ராமர் (வழக்கு எண்:WP(MD)16547) மற்றும் சுடலைமணி (வழக்கு எண்: WP(MD) 17255) ஆகிய இருவர் தொடுத்த வழக்குகளே காரணம் என தெரிகிறது. இது குறித்து கடந்த 13/10/14 மற்றும் 14.11.2014 அன்றும் இதை சார்ந்த அனைத்து துறை செயலர்கள், இயக்குனர்கள் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கும் மனு அளித்துள்ளோம். அதிலும் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. இந்த இரு வழக்குகளிலும் நாங்களும் ஒரு வாதியாக இணைந்தும் இன்னும் முடிவு எட்டப்படாமலே உள்ளது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. ஆகையால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் ஜனவரி 29 அன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து அனுமதி பெற்றுள்ளோம். இதில் தவறாமல் அனைவரும் கலந்து கொண்டு வழக்கினை விரைந்து முடிக்க வலியுறுத்துவோம். நமது பணியை பெற நாம் நமது பலத்தினை காட்டுவோம்.
    நாள் ; 29/01/2015
    இடம் ; சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை.
    நேரம் ; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

    இப்படிக்கு,
    உங்கள் நண்பர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி