TET சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்: தேர்வர்கள் கலக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2015

TET சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்: தேர்வர்கள் கலக்கம்


ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற பலருக்கு, தேர்ச்சிசான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இணையதளத்தில்:

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, 2013ல் நடந்தது.

இதில், '90 மதிப்பெண்ணுக்கு மேல், 60 சதவீதம் பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என அறிவிக்கப்பட்டது. இதன்பின், 82 மதிப்பெண் சலுகை மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டு, அவர்களும் தேர்ச்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தனர். பெரும்பாலும் தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று சான்றிதழ் பதிவிறக்கம் செய்தனர். அப்போது, இணையதளத்தில் தகவல்களை பதிவு செய்யும்போது ஏற்பட்ட ஒருசில தவறுகளால், பலருக்கு சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய முடியாமல் போனது. இதனால், டி.இ.டி., தேர்வு மதிப்பெண்ணை காட்டி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, பலர் பணியில் சேர்ந்தனர். அவர்களுக்கு தற்போது டி.இ.டி., தேர்ச்சி சான்றை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து,டி.ஆர்.பி.,க்கு பல புகார்கள் அனுப்பப்பட்டன.

மீண்டும் வாய்ப்பு:

இதன்பின் சான்றிதழ் பெறாதவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம், ஜன.,19 முதல், பிப்., 14 வரை அச்சடிக்கப்பட்ட சான்றிதழ் வழங்க, டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால், அதிலும் பலருக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை என புகார் வந்துள்ளது.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது: டி.ஆர்.பி., இணையதளத்தில், ஒரு முறை மட்டுமே சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்ற முறை பலர்,தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று பதிவிறக்கம் செய்தனர். தற்போது, டி.ஆர்.பி., அனுப்பிய சான்றிதழ்களில் அவர்களுக்கான சான்றிதழ் வரவில்லை. இணையதளத்தில் அவர்கள் விண்ணப்பித்தால், 'பதிவிறக்கம் செய்யப்பட்டது' என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து டி.ஆர்.பி., கவனத்திற்கு கொண்டு செல்வோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்:

பாதிக்கப்பட்ட தேர்வர் ஒருவர் கூறுகையில், 'டி.ஆர்.பி.,யின் ஒரு முறை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என்ற திட்டத்தால் தான், இந்த குழப்பம்.10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் சான்று வழங்குவதுபோல் அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்களை அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தால் குழப்பம் ஏற்படாது' என்றார்.

28 comments:

  1. Trb special teacher syllabus antha web sitela irru Ku therintbal sollavum

    ReplyDelete
    Replies
    1. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Delete
  2. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்

    ReplyDelete
  3. dear kalviseithi
    clarification camp ல் கலந்துகொண்டு தகுதி பெற்ற எவருக்கும் சான்றிதழ் ஆன்லைனில் பதிவேற்றமும் செய்யப்படவில்லை ceo office க்கும் அனுப்பப்படவில்லை.
    இது குறித்து ஒரு கட்டுரை வெளியிடவும்.

    ReplyDelete
  4. வீடு வரை DTED...
    வீதீ வரை TET....
    காடு வரை WEIGHTA
    GE..
    கடைசி வரை ?????????
    ?(CASE)...

    ReplyDelete
    Replies
    1. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Delete
  5. அமைதி...வளம்...வளர்ச்சி...அங்கே...,.........காத்திருத்தல்...மனஉளச்சல்...ஏமாற்றம்...இங்கே....நிம்மதி...மகிழ்ச்சி...சந்தோசம்...எங்கே?????

    ReplyDelete
  6. அமைதி...வளம்...வளர்ச்சி...அங்கே...,.........காத்திருத்தல்...மனஉளச்சல்...ஏமாற்றம்...இங்கே....நிம்மதி...மகிழ்ச்சி...சந்தோசம்...எங்கே?????

    ReplyDelete
  7. ஆதிதிராவிட நலத்துறை , பிரமிலை கள்ளர் பள்ளிகள் நியமனம் தாமதத்திற்கான காரணம் மற்றும் விரைந்து பணி நியமனம் முடிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள்
    இதுவரை என்ன நடந்தது இனி என்ன நடக்கும் ஒரு பார்வை
    வழக்கின் தற்போதய நிலை

    சகோதரர் திரு ராமர் , சகோதரர் திரு சுடலை மணி இருவர் தொடர்ந்த வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது இட ஒதுக்கீடு மற்றும் மாநில அரசின் கொள்கை முடிவு , தமிழக அரசின் தாழ்த்தப்பட்டோருக்கான முன்னுரிமை சம்பந்தமான வழக்கு என்பதால் அரசு தலைமை வழக்கறிவர் நீதிமான் ஐயா சோமையா ஜி அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜர் ஆனால் தான் வழக்கு முடிவுக்கு வரும்

    இது சம்பந்தமாக 4 முறை சென்னை சென்று தமிழக அரசிடம் முறையிட்டதற்கு அவர்கள் கூறிய பதில்கள்

    பள்ளிக்கல்வி துறை செயலர் கூறியவை

    வழக்கு விரைந்து முடிக்க அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டது நீதிமன்றத்தை அரசு நிர்பந்திக்க முடியாது வழக்கு வரும்போது முடிந்துவிடும்

    முதலமைச்சர் தனிப்பிரிவில் கூறியவை

    வழக்கு விரைந்து முடிக்க அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டது நீதிமன்றத்தை அரசு நிர்பந்திக்க முடியாது வழக்கு வரும்போது முடிந்துவிடும் அவர்கள் இருவர் வழக்கு தொடரும் போது நீங்கல் 669 பேர் அந்த வழக்கில் இணைந்து வழக்கு விரைந்து முடிக்க முயற்சி பண்ணுங்களேன்

    ஆசிரியர் தேர்வு வாரியம்

    வழக்கு விரைந்து முடிக்க அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டது நீதிமன்றத்தை அரசு நிர்பந்திக்க முடியாது வழக்கு வரும்போது முடிந்துவிடும்

    ஆதிதிராவிட நலத்துறை

    மதுரை யில்யில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை கிளை யில் உள்ளவர்கள் வழக்கின் நிலையை கவனித்து கொண்டு வருகின்றனர் வழக்கை விரைந்து முடித்து பணி நியமனம் செய்து விடுவோம் இந்த வழக்கால் நலத்துறை பல பிரச்சனையை சந்திக்கிறது உங்களை விட நாங்கள் இவ்வழக்கை முடிக்க அனைத்து வேலைகளும் செய்துவிட்டோம்
    அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக சொல்லி அரசாணை எல்லாம் போட்டு விட்டோம் வழக்கு மதுரை கிளையில் வரும்போது அவர் செல்வார் அன்று முடிவுக்கு வரும்

    அரசு தலைமை வழக்கறிஞர் உதவியாளர் கூறியவை

    சென்னை உயர்நீதிமன்றத்தில் அரத தலைமை வழக்கறிஞரை சந்திக்க சென்றபோது அனுமதி கிடைக்க வில்லை அவரது உதவியாளரை சந்தித்தோம் அவர் அரசு கூறினால் தலைமை வழக்கறிஞர் மதுரை செல்வார் அவரால் தனியாக முடிவு எடுத்து செல்ல முடியாது என்று கூறினார்


    பாதிக்கப்பட்ட நம் சார்பாக இருக்கும் வழக்கறிஞர் கூறியவை

    வழக்கு இறுதி நிலை எட்டி விட்டது தலைமை வழக்கறிஞர் ஆஜர் ஆனால் மட்டுமே முடிவுக்கு வரும்
    நாம் ஒரு நாள் நம் வழக்கிற்கு தேதி வாங்கலாம் ஆனால் அன்று தலைமை வழக்கறிஞர் ஆஜர் ஆகவில்லை என்றால் நீதிபதி வழக்கை நீண்ட நாள் தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளது

    அரசு தலைமை வழக்கறிஞர் மதுரை கிளை வருவதாக சொன்னால் அன்று எப்படியும் நீதிபதி முதல் 5 இடங்களுக்குள் தந்து விடுவார் வழக்கு முடிந்துவிடும் என்று கூறியுள்ளார்கள்
    எனவே நாம் செய்ய வேண்டியது அரசின் கவனத்தை ஈர்த்து அரசு தலைமை வழக்கறிஞரை மதுரை செல்ல வைக்க வேண்டும்

    அரசிற்கு பல பிரச்சனை எனவே அவர்கள் நம்மை மறந்து விட்டார்கள் நாம் அடையாள உண்ணாவிரதம் இருந்து அனைவரது கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்றால் மட்டுமே விரைவில் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும் இல்லை யெனில் அடுத்த கல்வியாண்டு தான் அதாவது ஜூன் மாதம் தான்

    உண்ணாவிரதத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்
    நாம் பணிக்கு விரைந்து செல்லும் நாட்களின் எண்ணிக்கை குறையும்

    நன்றி
    by ந . அகிலன் நடராஜன் : 8608224299
    ஜெகநாதன் :9442880680

    ReplyDelete
  8. போட்டியாளர்கள் எதிரிகள் அல்ல. அவர்கள் உங்கள் குறைபாடுகளை உங்களுக்கு நினைவூட்டுபவர்கள்.

    சத்குரு

    ReplyDelete
    Replies
    1. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Delete
  9. நீங்கள் வாழ்க்கையை மேம்போக்காகப் பார்த்தால் அது கொடூரமானது. நுட்பமாகப் பார்த்தால் அது அழகானது. அதையே ஆழமாகப் பார்த்தால் அது அற்புதமானது.

    சத்குரு

    ReplyDelete
  10. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டதால்தான், சொர்க்கத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சத்குரு

    ReplyDelete
  11. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும், உங்களுக்கு எது வேண்டுமோ அதை உருவாக்கினால், நீங்கள் எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் உங்கள் வாழ்க்கையே அழகுதான்.

    சத்குரு

    ReplyDelete
  12. எதன் மீதாவது பக்தி ஏற்படும்போதுதான் வாழ்க்கை ஆழமானதாக விளங்கும்.

    சத்குரு

    ReplyDelete
  13. உங்கள் துக்கத்துக்கு காரணம் உங்கள் கடந்த கால செயல்கள் அல்ல, அந்த செயல்களிலிருந்து அறிந்தவற்றை இன்று நீங்கள் பயன்படுத்தும் விதம்தான்.

    சத்குரு

    ReplyDelete
  14. ஆசைப்படுங்கள், வாழ்வின் மிக உயர்ந்தவற்றிற்கு ஆசைப்படுங்கள். உங்கள் முழு ஆர்வத்தையும் அத்திசையில் செலுத்துங்கள்.

    சத்குரு

    ReplyDelete
  15. உங்களைவிடப் பலம் குறைந்தவரிடமோ, உங்களை எதிர்க்க முடியாதவரிடமோ உங்கள் பலத்தைப் பிரயோகிப்பதைவிட அருவருப்பான செயல் வேறு எதுவும் இல்லை.

    சத்குரு

    ReplyDelete
  16. தெளிவில்லாத நம்பிக்கை அழிவை ஏற்படுத்தும். உங்கள் பார்வை தெளிவில்லாமல் இருந்தால் நீங்கள் நம்பிக்கையான ஓட்டுநராக இருந்தாலும் அது அழிவைத்தான் ஏற்படுத்தும்.

    சத்குரு

    ReplyDelete
  17. நீங்கள் வெற்றியை சுவைக்க வேண்டுமானால், சூழ்நிலைகளை கட்டமைக்கும் முன், நீங்கள் உங்களை முதலில் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.

    சத்குரு

    ReplyDelete
  18. உங்கள் தகுதிகள் உங்களுக்காக கதவை மட்டும் திறந்து விடலாம். ஆனால், இறுதியில், உங்கள் திறமை மட்டுமே உங்களுக்கு கை கொடுக்கும்.

    சத்குரு

    ReplyDelete
  19. கல்வியின் நோக்கம் தகவலைத் திணிப்பதாக இருக்கக் கூடாது, அறிவுத் தாகத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.

    சத்குரு

    ReplyDelete
  20. தாங்கள் மிகவும் புத்திசாலிகள் என்று நினைத்துக்கொள்ளும் முட்டாள்கள்தான் எப்போதும் வெற்றி பெறுபவரைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்.

    சத்குரு

    ReplyDelete
  21. tet certificate c.e.o officekkum varavillai enna pannuvathu

    ReplyDelete
    Replies
    1. below 90 kku tet certificate kidaikkuma?. review petition ennatchu? anybody knows reply

      Delete
  22. Akilan ungal karuthu nalla irukku

    ReplyDelete
    Replies
    1. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Delete
  23. wait .. Amma decides good way to u

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி