ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் மீண்டும் 0.25% குறைய வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2015

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் மீண்டும் 0.25% குறைய வாய்ப்பு


புதுடெல்லி: ரிசர்வ் வங்கி (RBI), நாளை வெளியிடயிருக்கும் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% என்ற அளவுக்கு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
20 மாதங்களாக நாட்டின் பொருளாதார நிலைமையை மதிப்பிட்ட பிறகு 25 அடிப்படை புள்ளிகள் (bps) என்றவிகிதத்தில் ஆச்சரியமூட்டும் வகையில் வட்டி விகிதத்தை குறைக்க உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த மாதம் தெரிவித்துள்ளது. அதாவது பிப்ரவரி 3ம் தேதி, செவ்வாய்கிழமை, 2014-15ம் நிதியாண்டில் அதன் ஆறாவது இரு மாத நிதிக் கொள்கையின் மறுஆய்வு கூட்டத்தில், மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் கோல் இந்தியா நிறுவனத்தின் 10% பங்கு விற்பனையின் மூலம், மத்திய அரசுக்கு ரூ.22,500 கோடி லாபம் கிடைத்துள்ளது.ரிசர்வ் வங்கி கடந்த மாதம் ஜனவரி 15ம் தேதி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% ஆக குறைத்து 8%ல் இருந்து 7.75% ஆக நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சில்லரை பணவீக்கம் 5% ஆகவும், மொத்த விலை பணவீக்கம் 0.1% ஆகவும், குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது இன்னும் கூடுதலான அதிகரிக்கப்பட்டால் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை சமாளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இரண்டு பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் அரசாங்கத்திற்கு ரூ.24,000 கோடி கிடைத்துள்ளது, அதில் செயில் நிறுவன பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் கடந்த வருடம் ரூ.1,719 கோடி மத்திய அரசுக்கு நிதி கிடைத்துள்ளது.

மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை கூடுதலாக அதிகரிக்கப்படுவதால் இந்த வருடத்தின் பங்கு விற்பனை ரூ.43,425 கோடி என்றஇலக்கை மத்திய அரசு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரியண்டல் வங்கியின் வர்த்தக தலைமையாளரான அனிமீஸ் சவுகான், ரிசர்வ் வங்கியின் கவர்னரான ரகுராம் ராஜன் பிப்ரவரி 3ம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% ஆக குறைப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி