இன்று கல்பனா சாவ்லாவின் 12வது நினைவு தினம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2015

இன்று கல்பனா சாவ்லாவின் 12வது நினைவு தினம்

இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் 12வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியை சேர்ந்த இவர், மார்ச் 17, 1962ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார். தனது சிறு வயதிலேயே விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக, வான்வெளிப் பொறியியலில் தனது இளங்கலைப் பட்டத்தை முடித்தவுடன் அமெரிக்கா சென்றார். இவர் மார்ச் 1995ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.

2003ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று கொலம்பியா விண்கலத்தில் பயணித்தார். அதுவே அவரது கடைசிப் பயணமாக மாறியது. விண்கலத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக வெடித்ததில் 2003ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி இறந்தார். அவரின் நினைவாக விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறு கிரகத்திற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி