'புரோகிராம்' செய்யப்பட்ட கால்குலேட்டர்:பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்தலாமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2015

'புரோகிராம்' செய்யப்பட்ட கால்குலேட்டர்:பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்தலாமா?


'பிளஸ் 2 தேர்வில், சிறப்புப் பாடம் எழுதும் மாணவர்களுக்கு, 'புரோகிராம்' செய்யப்படாத கால்குலேட்டர்களை மட்டுமே, தேர்வறையில் அனுமதிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5 - 31 வரை நடக்கிறது. தேர்வு அறையில், மாணவர்கள் எடுத்துச் செல்லக் கூடிய பொருட்களில், எதை அனுமதிக்கலாம்;எதை அனுமதிக்கக் கூடாது என்ற கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.இதேபோல், சிறப்புத் தேர்வுகளுக்கான கூடுதல் தேவைகள் குறித்தும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

* கணிதம், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், புள்ளியியல், வேதியியல், இயற்பியல் மற்றும் வணிகக் கணிதம் போன்ற தேர்வுகளுக்கு, 'லாகரிதம்' அட்டவணை, புள்ளிவிவர அட்டவணை, 'கிராப் ஷீட்' போன்றவை தேர்வறையில் வழங்கப்படும்.

* புள்ளியியல் மற்றும் வணிகக் கணிதம் பாடங்கள் எழுதும் மாணவ, மாணவியர், 'புரோகிராம்' செய்யப்படாத சாதாரண கால்குலேட்டர் மட்டும் கொண்டு வர அனுமதிக்கப்படும்.

இது போன்ற விவரங்கள், அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி