பிளஸ் 2 வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2015

பிளஸ் 2 வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

பிளஸ் 2 தேர்வு வினாத்தாள், 'லீக்' ஆகாமல் பாதுகாக்க, ரகசிய காப்பு அறைகளில், இன்று முதல் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச், 5ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2 வினாத்தாள்கள் சென்னையிலிருந்து, நேற்று பிற்பகலில் மாவட்டங்களுக்கு தனித்தனி வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

பல கட்டுப்பாடுகள்:

வாகனங்களை வழி யில், தேவையின்றி நிறுத்தக்கூடாது; மொபைல் போனில் யாரையும் தொடர்பு கொண்டு பேசக்கூடாது என, வினாத்தாள் கொண்டு செல்வோருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுகள் மூடி முத்திரையிட்ட உறைகளில், மூன்றடுக்கு பாதுகாப்பு பண்டல்களுடன், மாவட்ட ரகசிய காப்பு அறைகளில் இன்று வைக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும், 130 இடங்களில் வினாத்தாள் ரகசிய காப்பு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று முதல், மார்ச், 5ம் தேதி அதிகாலை வரையில் வினாத் தாள்கள் பாதுகாக்கப்படுகிறது.

கட்டுகள் பிரிக்கப்பட்டு...:

மார்ச், 5ம் தேதி காலையில் தேர்வுத்துறை அதிகாரிகள் முன்னி லை யில், வினாத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டு, தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படும். கடந்த காலங்களில், வினாத்தாள்கள் சில இடங்களில் 'லீக்' ஆனதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, இம்முறை போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டில் வினாத்தாள் கட்டுகள், ரகசிய காப்பு அறையில் பாதுகாக்கப்பட உள்ளது.

இயக்குனர் கடிதம்:

இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் கடிதம் அனுப்பியுள்ளார். வினாத்தாள் கட்டுக்களை, ரகசிய காப்பு அறைகளில் போலீசார் பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பு அறையை உரிய உத்தரவு இன்றியோ, தேர்வுத்துறை அனுமதித்த அதிகாரிகள் இல்லாமலோ திறக்கக்கூடாது. மேலும், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, ரகசிய கேமராக்கள் பாதுகாப்பு அறை முன் நிறுவப்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

அதிகாரிகள் ஆய்வு:

வினாத்தாள் பாதுகாப்பு பணிகளை பார்வையிட தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தலைமையில், பள்ளி கல்வித்துறையின் இயக்குனர்கள் கண்ணப்பன், அறிவொளி, பூஜா குல்கர்னி. இளங்கோவன், பிச்சை, ராமேஸ்வர முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், தமிழகம் முழுவதும் 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கல்வி செயலர் சபீதாவும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆய்வு செய்து வருகிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி