652 கணினி பயிற்றுநர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2015

652 கணினி பயிற்றுநர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது


தமிழகம் முழுவதும் 652 கணினி பயிற்றுநர்களை நியமிப்பதற்கானசான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய 4 இடங்களில் வரும் திங்கள்கிழமை (மார்ச் 2) வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள்களில் வர இயலாதவர்கள் மார்ச் 2-ஆம் தேதி மீண்டும் பங்கேற்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அவ்வாறு வரும்போது, குறிப்பிட்ட நாளில் வர இயலாததற்கான காரணங்கள் மற்றும் அதற்கான ஆதாரங்களுடன் வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, மாநில வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 652 கணினி பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள எத்திராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும்,விழுப்புரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், சேலத்தில் சாரதாபாலமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், மதுரையில் ஓ.சி.பி.எம். மேல்நிலைப் பள்ளியிலும் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.இதற்கான அழைப்புக் கடிதங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

3 comments:

  1. SURESH SPD 90 Aboveku vidivukalam pirakkuma illaya

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்ற (90 above ) மற்றும் (82 - 89) அனைவருக்கும் நான் ஒன்று கூறுகின்றேன். தவறாக நீங்கள் நினைத்தால் என்னை மனித்து விடுங்கள்.

    1. உச்ச நீதி மன்றத்தில் உள்ள வழக்கு எப்படி தீர்ப்பு வரும் என நம் கல்வி வலை தளங்களில் உள்ள யாருக்கும் தெரியாது எனவே அவர்களிடம் எனக்கு பணி கிடைக்குமா ? கிடைக்காத என கேட்பதை விடுங்கள். நானும் பல முறை கேட்டவன் என்பதால் சொல்லுகிறேன்.

    2. ஆதி திராவிடர் பள்ளி மற்றும் நலத்துறை பள்ளி பணி நியமனம் மதுரை நீதி மன்றத்தில் உள்ள வழக்கு பற்றியும் யாருக்கும் தெரியாது எனவே அதை பற்றியும் கேக்காதிர்கள்..

    3. தமிழக அரசு என முடிவு எடுத்து உள்ளது என யாருக்கும் தெரியாது. நாம் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டல் சரியாக பதில் அளிப்பது இல்லை. மேலே உள்ள நான் குறிபிடப்பட்டு இருக்கும் இரண்டு வழக்கு பற்றி அரசின் நிலைப்பாடு என என்று யாருக்கும் தெரியாது.

    4. எனவே எதையும் எதிர் பார்க்க வேண்டாம் என் ஆசிரியர் சொந்தங்களே.
    நீங்கள் இரு பிரிவாக இருந்து கொண்டு வாதம் செய்வது நம் கண்களையே நாமே குத்துவதை போல் உள்ளது.

    நான் தவறாக எதாவது கூறினால் மன்னித்து விடுங்கள் நண்பர்களே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி