வனவர், கள உதவியாளர் தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2015

வனவர், கள உதவியாளர் தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு

தமிழக வனத்துறையில் வனவர், கள உதவியாளர் பணிக்கான தேர்வில், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளே தகுதியானவர்கள் என, வனச்சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்த செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் வனத்துறை மற்றும் வனக் கழகங்களில் காலியாக உள்ள, 181 வனவர், கள உதவியாளர் பதவிகளுக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்ய, சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் நெல்லையில், பிப்., 22ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு நாளன்று, காலை, 10:00 - 1:00 மணி வரை, பொது அறிவு தாள் - 1ம், பிற்பகல், 2:30 - 5:30 மணி வரை, பொது அறிவியல் தாள் - 2ம் நடக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 6,000 பேரது, 'ஹால் டிக்கெட்', www.forests.tn.nic.in அல்லது http://forest.examonline.co.in என்ற இணையதளங்களில் உள்ளது. இணையதளங்களில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அறிவியல் சார்ந்த பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் படித்தவர்கள் மட்டுமே, வனவர், கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

4 comments:

  1. M.A(ACADEMIC)-2010-12,BED(IGNOU,CALENDAR YEAR)-2011-13,COMPLETED PG KU ELIGIBLE OR NOT PLS REPLY

    ReplyDelete
  2. kindly update 60000 members applied for the above exam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி