"புராஜக்ட்' செய்து தருவதாக ஏமாற்றும் சென்டர் அதிகரிப்பு! பணத்தை இழந்து பரிதவிக்கும் மாணவிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2015

"புராஜக்ட்' செய்து தருவதாக ஏமாற்றும் சென்டர் அதிகரிப்பு! பணத்தை இழந்து பரிதவிக்கும் மாணவிகள்

 கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள்"புராஜக்ட்'களை பெரும்பாலும் தனியாரிடம் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து செய்வதால், மாணவர்களின் அறிவுத்திறன் குறைவதோடு, கல்லூரிகள் அந்த புராஜக்டை ஏற்காத நிலையும் உள்ளது.


பாலிடெக்னிக், இன்ஜினியரிங், கலை,அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு "புராஜக்ட்' உள்ளது. குறிப்பிட்ட தலைப்பு வழங்கப்படும். பி.எஸ்.சி., .டி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.பி.., பி.., .டி., மாணவர்கள் சாப்ட்வேர் முறையில் இந்த புராஜக்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் சமர்ப்பித்த புராஜக்ட் மீது,பேராசிரியர்கள் நேர்காணல் நடத்துவர். சரியாக பதில் கூறுபவர்களுக்கே மதிப்பெண் வழங்கப்படும்.சாப்ட்வேர் சம்பந்தமாக புராஜக்ட் வழங்க பல்வேறு தனியார் கம்ப்யூட்டர் மையங்கள் களத்தில் குதிக்கின்றன. இவர்கள் மாணவர்களிடம்,குறிப்பிட்ட சாப்ட்வேரை பயின்றால், அதை கற்று கொள்வதுடன், கல்லூரிக்கான இறுதியாண்டு சாப்ட்வேரையும் செய்து தருவோம் என கூறுகின்றனர்.

இன்னொரு வகையில் சிறந்த இன்ஜினியர்கள் மூலம், இந்த புராஜக்ட் செய்து ரெடிமேடாக கொடுக்கப்படுகிறது. இதற்கு குறைந்தது ரூ.5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. ஒரு சில நேரங்களில் இந்த புராஜக்டை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் மாணவர்கள் பணம் விரயமாவதுடன் புராஜக்ட் குறித்த எவ்வித புரிதலும் இல்லாமல், அதை உடனே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.காரைக்குடியில் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் புராஜக்ட் செய்வதற்காக இன்ஜி., கல்லூரி மாணவிகள் ரூ.12 ஆயிரம் வழங்கியுள்ளனர். அந்த புராஜக்ட் வேறு தலைப்பில் உள்ளதாக கூறி பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என கூறி மாணவிகள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டனர். நிறுவனம் சார்பிலோ, நாங்கள் அவர்கள் கூறிய தலைப்பில் தான் புராஜக்ட்டை வடிவமைத்தோம். தற்போது அவர்கள் இதைவிட குறைவான விலையில் வேறு இடத்தில் ஏற்பாடு செய்து விட்டனர். அதனால், பணத்தை கேட்கின்றனர், என்றார்.

கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறும்போது: ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே புராஜக்ட் செய்ய சொல்கின்றனர். ஆனால், மாணவர்கள் செய்வதில்லை. கடையில் ரெடிமேடாக வாங்கி கொடுக்கின்றனர். பல அறிவியல் கண்காட்சியில், இந்த வகை ரெடிமேடு புராஜக்ட்களுக்கு முதல் பரிசும் கிடைக்கிறது. இந்த பழக்கம் பி.எச்.டி., வரை தொடர்கிறது. இதனால் முழுமையான அறிவாற்றல் அந்த மாணவருக்கு கிடைக்காது. கல்லூரிகளும் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். அதுவரை இந்த குழப்பம் இருக்கத்தான் செய்யும், என்றார்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி