நெருங்குகிறது பொதுத்தேர்வுகள்; பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2015

நெருங்குகிறது பொதுத்தேர்வுகள்; பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் துவக்கம்


கோவை:சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 1ம் தேதியும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 2ம் தேதியும் துவங்குகின்றன.
கோவை மாவட்டத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் நடந்து வருகின்றன.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 1ம் தேதி ஆங்கில விருப்ப பாடமும், 4ம்தேதி வரலாறு, 8ம் தேதி அரசியல் அறிவியல், 11 ம் தேதி வேதியியல், 13ம் தேதிவிருப்ப பாடம், 20ம் தேதி கணிதம், 22ல் கம்ப்யூட்டர் சயின்ஸ், 26ல் பொருளாதாரம், 29ல் புவியியல், ஏப்ரல் 17ல் ஓவியம் உள்ளிட்ட தேர்வுகள் நடக்கின்றன.அதே போல், பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 2ம் தேதி மொழித்தேர்வுகள், 3ல் கணிதம், 10ல் அறிவியல், 14ல் சமூக அறிவியல், 19ல் ஆட்டோ மொபைல் டெக்னாலஜி உள்ளிட்ட தேர்வுகள் நடக்கிறது.கோவை மாவட்டத்தில், 77 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில், 20 பள்ளிகளில் மட்டுமே , 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 செயல்பட்டு வருகின்றன. இத்தேர்வுகளில், 300 மாணவர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இம்மாணவர்களுக்கான, சிறப்பு பயிற்சிகள் பள்ளிகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நேஷனல் மாடல் பள்ளி தலைமையாசிரியை கீதா கூறுகையில்,”பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.”புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுதல் என்பது மாணவர்களின் சிந்தனையை தூண்டும் பிரிவு; இப்பிரிவுகளுக்கு பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்பிரிவுக்கு, 10 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., மாணவர்களை பொறுத்தவரை, 60 மதிப்பெணகளுக்கு மட்டுமே தேர்வெழுதுகின்றனர். மீதமுள்ள, 40 மதிப்பெண்கள் செயல்வழி கல்விக்கு வழங்கப்படுகின்றன,” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி