மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம்: அமைச்சர் கோகுலஇந்திரா ஆய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2015

மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம்: அமைச்சர் கோகுலஇந்திரா ஆய்வு


கைத்தறி நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, 2015-16 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிச் சிறார்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் குறித்து தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர்களுடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா இன்று ஆய்வு நடத்தினார்.
கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநரக கூட்டரங்கில் நடந்த இந்த விரிவான ஆய்வு கூட்டத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் முதன்மைச் செயலாளர் ஹர்மயதர்சிங், கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் தி.ந.வெங்கடேஷ், மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் கூடுதல் இயக்குநர் கே.கர்ணன், துறை உயர் அலுவலர்கள் மற்றும் சரக துணை / உதவி இயக்குநர்கள் கலந்துக் கொண்டனர்.தமிழக அரசு 1985 ஆம் ஆண்டு முதல் பள்ளிச்சிறார்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. விலையில்லா சீருடை திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்திட ஆணை வழங்கப்பட்டு, மேற்படி திட்டத்தின்கீழ் 4 இணை சீருடைகளுக்குத் தேவையான சீருடைத் துணியினை உற்பத்திசெய்ய கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்களுக்கும் விசைத்தறி நெசவாளர்களுக்கும் உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி, 2015-16 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா சீருடைத் திட்டத்தின்கீழ் சரக சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உற்பத்தி திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள உற்பத்தி, கொள்முதல் மற்றும் சமூக நலத்துறைக்கு விநியோகம் செய்த விவரம் குறித்து அமைச்சர் விரிவாக ஆய்வு செய்தார்.இத்திட்டத்தின்கீழான முதல் இரு இணை சீருடைத் துணிகள் 15.3.2015-க்குள் சமூக நலத்துறைக்கு அனுப்பப்பட வேண்டியுள்ளதால், துறை அலுவலர்கள் மிகுந்த கவனத்துடனும் போர்க்கால அடிப்படையிலும் நடவடிக்கை எடுத்து குறிப்பிடகாலகெடுவிற்குள் தேவையான துணிகளை நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி