மாறுகிறது பாலிடெக்னிக் கல்லூரி பாடத்திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2015

மாறுகிறது பாலிடெக்னிக் கல்லூரி பாடத்திட்டம்


தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்திற்கு உட்பட்ட அரசு, உதவிபெறும் மற்றும்சுயநிதிப் பிரிவு பாலிடெக்னிக்குகளில் மின்னணுவியல், தொடர்பியல் துறைக்கான பாடத் திட்டம் 2011-12ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் மாற்றம் கொண்டுவர உசிலம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜெகநாதன் தலைமையில் பேராசிரியர் குழு ஏற்படுத்தப்பட்டது. மதுரையில் இக்குழு நேற்றுஆய்வு நடத்தியது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் பேராசிரியர்கள் 40 பேர் பங்கேற்றனர். ஜெகநாதன் கூறுகையில்"மின்னணுவியல் டெஸ்டிங், அதிக திறன் வளர்க்கும் கணினி பிரிவு பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். கோவை, திருச்சி, நெல்லையிலும் ஆய்வு நடந்தது. இதன் முடிவு பாடத் திட்ட கமிட்டியிடம் ஆகஸ்ட்டில் தாக்கல் செய்யப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி