சிறப்பு பி.எட். ஆசிரியர்கள் நியமன அறிவிப்பில் குழப்பம் பள்ளிக் கல்விச் செயலருக்கு கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2015

சிறப்பு பி.எட். ஆசிரியர்கள் நியமன அறிவிப்பில் குழப்பம் பள்ளிக் கல்விச் செயலருக்கு கடிதம்


மாற்றுத் திறன் மாணவர்களின் கல்விக்காக சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பில் நிலவும் குழப்பத்தை தெளிவுபடுத்துமாறு பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு சிறப்பு பிஎட் பட்டதாரிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
அனைத்து மாவட்ட சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்கத் தின் மாநிலத் தலைவர் பி.வடிவேல் முருகன் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறன் மாணவர்களின் கல்விக்காக 202 சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறை கடந்த 13-ம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், சிறப்பு ஆசிரியர் பணியிடம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பில் குழப்பம் உள்ளது. அந்த அறிவிப்பில் பார்வை குறைபாடு, காது கேட்கும் திறன் குறைபாடு மாணவர்கள் என இருகுறைபாடுகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மன வளர்ச்சி குறைபாடு, உடலியக்க குறைபாடுடைய மாணவர்களுக்கான ஆசிரியர்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இதை பள்ளிக் கல்வித் துறை தெளிவுபடுத்த வேண்டும். குறைபாடு வாரியாக முக்கியத் துவம் வழங்கி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர பணியிடத்தில் சிறப்பு பிஎட் பட்டம் பெற்றவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறன் மாணவர் களுக்கு கல்வியுடன், பயிற்சியும் அளிக்க வேண்டும். தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரை மனநலம் பாதித்த 1,092 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இவர் களுக்கு பயிற்றுவிக்க தனியாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக அறிவிப்பில் கூறப்படவில்லை. தற்போது நிரப்பப்பட உள்ளசிறப்பு ஆசிரியர் பணியிடங்களில் ஏற்கெனவே ஐஇடிஎஸ்எஸ், எஸ்எஸ்ஏ திட்டங்களில் பணிபுரிந்துவரும் தகுதிபெற்ற சிறப்பு பிஎட் பட்டதாரிகளை நியமிக்கவும், எஞ்சியஇடங்களில் பிற சிறப்பு பிஎட் பட்டதாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி