ஆண்ட்ராய்டு போன்… பாதுகாக்கும் வழிகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2015

ஆண்ட்ராய்டு போன்… பாதுகாக்கும் வழிகள்!


இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம்.
ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும்.

ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா.

ஸ்கிரீன் லாக்!

எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுதான் அடிப்படையான பாதுகாப்பு வசதி. இதில் பேட்டர்ன், பின் (PIN), பாஸ்வேர்டு என்ற மூன்றும் எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில், இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் துவது கட்டாயம்.இதுமாதிரியான எந்த பாதுகாப்பும் இல்லாத போன்கள் தொலைந்து, அது இன்னொருவர் கையில் கிடைக்கும் போது, அந்த போன்களில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் ஒருவர் எளிதாக எடுத்து பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இது ஒரு சிறந்த வழி.

என்க்ரிப்ட் வசதி

மேலே சொன்ன செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் ஸ்கிரீன் லாக் பகுதிக்குக் கீழ்‘என்க்ரிப்ட்’ என்ற வசதி இருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டுவிடும். ஒவ்வொருமுறை போனை ஆன் செய்யும்போதும் நாம் ‘டிகிரிப்ட்’ செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நம் போன் தொலைந்துபோனாலும் முக்கியமான தகவல்களை யாராலும் திருட முடியாது.

ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்!

செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் அடுத்ததாக இருக்கும் வசதிதான் இது. இதன்மூலம் நமது போன் காணாமல் போகும்போது android.com/devicemanager என்ற முகவரிக்குச் சென்று, ஐந்து நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி அல்லது டிவைஸ் லாக் ஆகும்படி அல்லது தகவல்கள் அனைத்தையும் அழிக்கும்படி (Erase) செய்ய முடியும். இதற்கு, போனில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். அதேபோல, போன் சுவிட்ச்ஆஃப் ஆகி இருக்கவும் கூடாது. இதுவும் ஒருவகையில் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிதான்.

அலுவலக/பொது இணையத்தைப் பயன்படுத்துதல்!

பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான ESET சொல்லும் கணக்கின் படி, அலுவலகங்களில்வை-ஃபை மூலம் இணையத்தைப் பயன்படுத்து வதால், 30-40% வைரஸ் பிரச்னையால்பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வை-ஃபை பயன்படுத்துவதற்குமுன், அது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை நெட்வொர்க் அட்மினிடம் கேட்டு, அதற்குப் பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.இதேபோல, பொது இடங்களில் கிடைக்கும் இலவச வை-ஃபை இணைப்பின் பாதுகாப்பும் கேள்விக்குரியதே. பொது இடங்களில் கட்டாயம் இணையம் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளவர்கள், 2ஜி/3ஜி டேட்டா ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.

முக்கியமான தகவல்கள் பத்திரம்!

உங்களுக்கு மிக முக்கியமானதாகத் தோன்றும் எந்தத் தகவலையும் உங்கள் போனில் பதிவு செய்து வைக்காதீர்கள். இதனால் போன் திருடுபோவது தவிர, போன் பழுதாகி அதை சர்வீஸ் சென்டரில் தரும்போதும் பாதுகாப்பாக இருக்க முடியும்.

நம்பகமில்லா அப்ளிகேஷன்கள் வேண்டாம்!

குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோடு செய்யும்முன் அதன் தேவை, பாதுகாப்பு போன்றவற்றைத் தெரிந்துகொண்டு டவுன்லோடு செய்வது நல்லது.குறிப்பாக, கூகுள் ப்ளே இல்லாமல் வேறு எங்கிருந்தும் இன்ஸ்டால் செய்யப்படும் அப்ளிகேஷன்கள் போனுக்குப் பாதுகாப்பானதில்லை.

அப்ளிகேஷன் லாக்!

முக்கியமான தகவல்கள் இருக்கும் கேலரி, இன்பாக்ஸ், மெயில் அப்ளிகேஷன்களை எப்போதும் லாக் செய்து வைக்கலாம்.இதெற்கென்றே கூகுள் ப்ளேயில் நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன. இது, ஒவ்வொருமுறை குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஓப்பன் செய்யும்போதும் ஒரு பாஸ்வேர்டு/பின் (PIN)நம்பர் கேட்கும்.

ரூட் (Root) செய்ய வேண்டாம்!

போனை ரூட் செய்வது என்பது நம் விண்டோஸ் கணினியில் அட்மின் கணக்கை பயன்படுத்துவதுபோல. இதன்மூலம் போனுக்குத் தேவையான லேட்டஸ்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் முதல், இயங்காத அப்ளிகேஷனை இயங்கவைப்பது வரை என பல்வேறு வசதிகள் கிடைக்கும்.ஆனால் ரூட் அக்சஸ் உள்ள அப்ளிகேஷன், போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அறியும்வசதியைப் பெறும். இதனால் பாதுகாப்பற்ற ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.

பிரவுஸர்கள் எச்சரிக்கை!

போனில் பிரவுஸர்களைப் பயன்படுத்தும்போது பாஸ்வேர்டு அல்லது இதர தகவல்களைக் கொடுத்தால், பயன்படுத்தி முடித்தபின் ஹிஸ்டரியை அழித்துவிடுவது (Delete) முக்கியமானது.அதேபோல, பணப் பரிவர்த்தனை தொடர்பான வேலைகளுக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனை டவுன்லோடு செய்வதுதான் பாதுகாப்பானது.

அப்டேட் அவசியம்!

போனின் சாஃப்ட்வேரை புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்துவைத் திருப்பது அவசியமான ஒன்று. அதேபோல, அப்ளிகேஷன்களுக்கும் அப்டேட் வசதி வரும்போதெல்லாம் அதைச் செய்துகொள்ள வேண்டும்.ஆனால், அந்தசமயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்ளிகேஷன்கள் நம்மிடம் கேட்கும் அனுமதிகளை நன்கு படித்துப் பார்த்த பிறகே, அனுமதி வழங்க வேண்டும்.

போன் தொலைந்துவிட்டால்..?

இறுதியாக, இத்தனை பாதுகாப்பாக இருந்தும் உங்கள் போன் தொலைந்துபோய்விட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஜிமெயில், ஃபேஸ்புக் போன்றவற்றின் பாஸ்வேர்டைமாற்றுவது.அடுத்தபடியாக, ‘ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்’ மூலம் போனில் இருக்கும் தகவல்களை அழிக்க முயற்சி செய்வதுதான்.ஆண்ட்ராய்டு போனின் பாதுகாப்புக்கான வழிகளைச் சொல்லிவிட்டோம்.

இந்த வழிகளை நீங்களும் பின்பற்றலாமே!

1 comment:

  1. National Testing Agency will conduct JEE Mains twice in a year in the month of January and April 2020. Through JEE Mains 2020 students will get admission in NITs, IIITs, IITs and many other government-funded technical institute. The notification for JEE Mains 2020 will release in the month of September 2019. JEE Mains is also screening test for JEE Advanced exam. Only those candidate will be eligible to take part in JEE Advanced exam who clears cut off marks of the JEE Mains 2020. Read the complete article to know more details about

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி