விஷமாக மாறும் மதிய உணவு: பா.ஜ., - எம்.பி., 'பகீர்' குற்றச்சாட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2015

விஷமாக மாறும் மதிய உணவு: பா.ஜ., - எம்.பி., 'பகீர்' குற்றச்சாட்டு


பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு, சுகாதாரமற்ற முறையில் இருப்பதால், விஷமாகமாறி வருகிறது,'' என, லோக்சபாவில், பா.ஜ., - எம்.பி., ரவீந்திர குமார் பாண்டேகூறிய குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டது.லோக்சபாவில் நேற்று, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ., - எம்.பி., ரவீந்திர குமார் பாண்டே பேசியதாவது:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மத்திய அரசால், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு, போதிய தரம் இல்லாமலும், சுகாதாரம் இன்றியும் உள்ளது. இதனால், இந்த உணவை சாப்பிடும் மாணவர்கள், வயிற்று வலி, மயக்கம் போன்ற பல்வேறு உடல்நலக்குறைவுகளுக்கு ஆளாகின்றனர். இதனால், மதிய உணவு, விஷமாக மாறி வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார். பா.ஜ., - எம்.பி.,யின் பேச்சால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஸ்மிருதி இரானி, இந்த குற்றச்சாட்டை மறுத்தார். அவர் பேசுகையில், ''பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு, விஷமாக மாறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. ஆனாலும், மதிய உணவின் தரம் குறித்து, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி