"கற்றல் உபகரணப் பெட்டிகள் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2015

"கற்றல் உபகரணப் பெட்டிகள் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு'


பொது நூலகத்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா கற்றல் உபகரணப்பெட்டிகள் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரகத்தில் பொது நூலகத் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கற்றல் உபகரணப்பெட்டிகளை வழங்கி அவர் மேலும் பேசியது:பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் படிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கில் 2012-13 ஆம் கல்வி ஆண்டு முதல் புத்தகப்பை, கிரையான்கள், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி, வரைபடப் புத்தகம் உள்ளடக்கிய கற்றல் உபகரணங்களை ரூ. 330 கோடி செலவில் வழங்கி வருகிறது.தொடர்ச்சியாக, மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மாவட்ட மைய நூலக குழந்தைகள் பிரிவில் புதிய உறுப்பினராகச் சேரும் முதல் 100 குழந்தைகளுக்கு மனவளர்ச்சி மற்றும் படிப்பாற்றலை மேம்படுத்தும் வகையில் இந்த விலையில்லா கற்றல் உபகரணப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.மேலும், ரூ. 200 மதிப்பிலான விலையில்லா கற்றல் உபகரணப்பெட்டியில் வண்ணப் பென்சில்கள், களிமண் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் உள்ளன.

மாவட்டத்துக்கு ரூ. 200 மதிப்பில் 100 உபகரணப்பெட்டிகள் ரூ. 20 ஆயிரம் மதிப்பில் மாவட்ட நூலக ஆணைக் குழு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.இதேபோல், 32 மாவட்டங்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ. 6.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் மனவளச்சி, படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கும், அதிக குழந்தைகள் உறுப்பினராக நூலகங்களில் சேர ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்றார்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு. மாரிமுத்து, மாவட்ட நூலக அலுவலர் மாதவன், தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம், மைய நூலகர்கள் கண்ணன், ஈஸ்வரன், சங்கர்கணேஷ், சின்னத்துரை, உதவியாளர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி