விருதுநகரில் வினாத்தாள் பாதுகாப்பு மையங்களின் கட்டு காப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2015

விருதுநகரில் வினாத்தாள் பாதுகாப்பு மையங்களின் கட்டு காப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்

10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் பாதுகாப்பு மையங்களின் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை மாலையில் நடைபெற்றது.


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு குறிப்பிட்ட நாளில்  வினாத்தாள்கள் கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்காக 10 வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அரசு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் கட்டுக்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். இதற்காக மூத்த தலைமையாசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியரும் என ஒவ்வொரு மையத்திற்கும் 2 பேர் வீதம் 20 வினாத்தாள் கட்டு காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் கே.வி.எஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். இதில் பள்ளி கல்வித்துறையின் இணை இயக்குநர் குப்புசாமி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பிட்ட  வினாத்தாள் மையத்திற்கு எத்தனை தேர்வு மையங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் வினாத்தாள் கட்டுக்கள் வந்துள்ளதா என்பதை பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய வினாத்தாள் பதிவேடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பண்டல்களை சரிபார்க்க வேண்டும்.

அதில், ஏதாவது குறைவாக இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பி்ன்னர் வினாத்தாள் கட்டுக்களை எளிதில் உடைக்க முடியாத இரும்பு பீரோவில் 2 பூட்டுக்களால் பூட்டி சாவியை இருவரும் ஒவ்வொன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். அதையடுத்து, அம்மையத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்வு நாளில் வாகனத்தில் எடுத்துச் செல்லப்படும் வினாத்தாள் கட்டுக்கள் தேர்வு மையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக சேர்ந்ததா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அவர்  கட்டுக்காப்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் மூத்த தலைமையாசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி