பள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு: மத்திய அமைச்சர் யோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2015

பள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு: மத்திய அமைச்சர் யோசனை


பள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு நடத்த வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.இது குறித்து சனிக்கிழமை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு நடத்திய"நாட்டின் வளர்ச்சியில் விளையாட்டின் பங்கு' குறித்த கருத்தரங்கில் அவர் கூறியது:
பள்ளிகளில் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக வாரம் ஒரு நாள் விளையாட்டு வகுப்பு என்பதற்கு பதிலாக நாள்தோறும் விளையாட்டு வகுப்பை நடத்த வேண்டும். விளையாட்டுகளம் மட்டும்தான் அந்தந்த விளையாட்டு சார்ந்த அனைத்து மக்களின் சமூக, கலாசாரத்தை இணைக்கிறது. ஆசிரியர்கள் விளையாட்டு பற்றிய தங்களது அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலும், மாணவர்களின் விளையாட்டு திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு ஒன்றுதான் நாட்டின் பெருமையை உலகுக்கு பறைசாற்றுவதால் விளையாட்டு தொடர்பான அறிவை ஊக்குவிக்க நாம் அனைவரும் பாடுபடவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி