முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விழுப்புரத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2015

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விழுப்புரத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு


முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களின் சான்றிதழ் சரி பார்ப்பு முகாம், விழுப்புரத்தில் நடந்தது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு, கடந்த மாதம் 10ம் தேதி நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வு நடந்தது. தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. மதுரை, சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கும் பணி நேற்று நடந்தது. விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில், 14 குழுக்களாக சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்தது. சி.இ.ஓ., மார்ஸ் தலைமையில்மாவட்ட தொடக்கக் கல்வி அ<லுவலர் சீத்தாராமன், .இ.ஓ.,க்கள் பாஸ்கரன், தனமணிமற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலக கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர் வசுந்தராதேவி, துணை இயக்குநர் பூபதி ஆகியோர் கூர்ந்தாய்வுமேற்கொண்டனர். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சண்முகம், அலுவலககண்காணிப்பாளர் புருஷோத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி