பள்ளிகளுக்கு அடிப்படை வசதி தாட்கோ மூலம் நிதி ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2015

பள்ளிகளுக்கு அடிப்படை வசதி தாட்கோ மூலம் நிதி ஒதுக்கீடு

ஈரோடு:மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், கழிவறைகள் கட்ட, ஈரோடு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தாட்கோ திட்டத்தின் மூலம் ரூ.1.79 கோடி நிதி ஒதுக்கபட்டுள்ளது.
இதுகுறித்து கோவை தாட்கோ திட்ட உதவி பொறியாளர் பாட்ஷா கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், குடிநீர் தொட்டி அமைத்தல், கழிவறை கட்ட தாட்கோ திட்டம் மூலம், ரூ.58 கோடி நிதியை அரசு நடப்பாண்டில் ஒதுக்கி உள்ளது. அதனடிப்படையில் ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு, ரூ.1.79 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.மாவட்டத்தில் மலை மற்றும் வனத்தை ஒட்டியுள்ள பர்கூர், ஆசனூர், தலமலை, பெஜலட்டி, குத்தியாலத்தூர், கெத்தேசால், நகலூர், கொங்காடை, கிளத்தடி சோளகா, குட்டையூர், கத்திரிமலை, காக்காயனூர், சோளக்கனை, பத்திரிபடகு, காணக்கரையில் அமைந்துள்ள பள்ளிகளில் சுற்றுச்சுவர், குடிநீர் தொட்டி வசதி, கழிவறை கட்டமைப்பு வசதிகள் கட்ட நிதி ஒதுக்கபட்டுள்ளது.எந்தெந்த பள்ளிகளுக்கு எந்த மாதிரியான அடிப்படை வசதிகள் தேவை என்பது குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. இப்பணி முடிந்தவுடன் ஓரிரு மாதங்களில் முறைப்படி டெண்டர் விடப்படும். அதன்படி கட்டுமான பணி துவங்கி நடக்கும் என்றார்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி